-
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் ஹஜ் யாத்திரை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் சாதகமான நடவடிக்கை
மட்டக்களப்பு: கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு செல்வதில் விடுமுறை பெறுவது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார், கிழக்கு மாகாண ஆளுனருடன் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போதே பல சாதகமான தீர்மானங்கள் குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கவனம் செலுத்தியுள்ளார்.
-
ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!
– MJ காத்தான்குடி: இன்றைய நாள் 03-08-1990. வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆலயங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன.
-
79 வருட கால தாகத்தை தணித்த மொயின் அலி
லண்டன்: தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியின் போது ஹட்ரிக் விக்கெட் எடுத்த மொயின் அலி இங்கிலாந்து அணியின் 79 ஆண்டுகால தாகத்தை தணித்துள்ளார்.தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என்ற முன்னிலையில் உள்ளது.
-
சவுதியிலிருந்து வந்தவர் விமானநிலையத்தில் உயிரிழப்பு!
கொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.தெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
-
இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்
கொழும்பு: இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச மற்றும் தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் பிரனாந்து ஆகியோர் இணைந்து குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
-
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற காத்தான்குடி ஒன்றுகூடல்
லண்டன்: “காத்தான்குடி வெல்ஃபெயார் ஓர்கனைசேசன்” (KWO) ஏற்பாடு செய்த ஐக்கிய இராச்சியத்தில் வாழும் காத்தான்குடி மக்களுக்கான 4வது ஒன்று கூடல் கடந்த 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை மில்டன்கெய்ன்ஸ் நகரின் எழில் கொஞ்சும் எம்பேர்டன் பூங்காவில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புறக்கோட்டை வீதிக்கடைகளின் உணவுகள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
கொழும்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான சேவையின் போது, புறக்கோட்டையிலுள்ள வீதிக்கடைகளின் உணவுகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியின் போது மஹிந்தவின் மைத்துனரினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டது.
-
விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் தங்களது கொள்கையினை கல்குடாவில் முன்னெடுக்கும் ஸியாக்கள்
கல்குடா: கிழக்கு மாகாணத்திலே கல்குடா பிரதேசமே அஹ்லுல் பைத் கொள்கையினை (ஸியாக்கள்) பின்பற்றுபவர்களின் பிரதான தளமாக காணப்படுகின்றது. அந்த வகையிலே ஏனைய இஸ்லாமிய கொள்கையினை பின்பற்றுபவர்களின் எதிர்ப்புக்களுக்கும், விமர்சனங்களுக்கும் முகம்கொடுத்து வரும் ஸியா முஸ்லிம் பிரிவினர் தங்களது கொள்கையினை கல்குடாவில் முன்னெடுப்பதில் தாங்கள் முன் வைத்த காலினை பின் வைக்க போவதில்லை என்ற பாணியில் அவர்களுடைய கொள்கை பரப்பும் விடயங்களும், மார்க்க விடயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
-
முதல் டெஸ்ட் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா
காலி: முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிக சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் பங்கேற்கிறது.
-
நாடு முழுவதும் ஒரே நாளில் மாகாண சபை தேர்தல்
கொழும்பு: நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில், மாகாண சபைத் தேர்தல்கள் ஒரே தடவையில் நடாத்தப்படாமல் தனித்தனியாக நடாத்தப்பட்டதன் மூலம், மனித வளம் உள்ளிட்ட ஏனைய வளங்கள் பாரிய விரயத்திற்குள்ளாகின்றமை, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அவசியமான அரசாங்கத்தின் சேவைகளை வழங்குவதில் தாமதம், தேர்தல் காரமான வன்முறை நடவடிக்கைகள், தேர்தல் மோடி மற்றும் அரச வளங்களின் முறையற்ற பயன்பாடு போன்றன அதிகரித்துள்ளது.
-
மலேசியாவின் மலாயா வேல்ஸ் பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆர்.ஹஸன் கொழும்பு: மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடத்துகின்ற சர்வதேச மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்டீவ் கிரிவ்விட்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் கல்வித்துறை பங்களிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
-
எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
கொழும்பு: இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.