விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் தங்களது கொள்கையினை கல்குடாவில் முன்னெடுக்கும் ஸியாக்கள்

SHIA 1 KALKUDAகல்குடா: கிழக்கு மாகாணத்திலே கல்குடா பிரதேசமே அஹ்லுல் பைத் கொள்கையினை (ஸியாக்கள்) பின்பற்றுபவர்களின் பிரதான தளமாக காணப்படுகின்றது. அந்த வகையிலே ஏனைய இஸ்லாமிய கொள்கையினை பின்பற்றுபவர்களின் எதிர்ப்புக்களுக்கும், விமர்சனங்களுக்கும் முகம்கொடுத்து வரும் ஸியா முஸ்லிம் பிரிவினர் தங்களது கொள்கையினை கல்குடாவில் முன்னெடுப்பதில் தாங்கள் முன் வைத்த காலினை பின் வைக்க போவதில்லை என்ற பாணியில் அவர்களுடைய கொள்கை பரப்பும் விடயங்களும், மார்க்க விடயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

SHIA 1 KALKUDA

அந்த வகையில் நேற்று 27.07.2017 கல்குடா பாலை நகர் தாருள் இமாம் ஜஃபர் சாதிக் பணிமனை ஏற்பாடு செய்திருந்து வெள்ளிகிழமை இரவில் நடாத்தப்படும் விஷே பிரார்த்தனையான துஆ குமைல் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் விமர்சனங்களையும், எதிர்ப்புக்களையும் தாண்டி அனேகமான ஸியா கொள்கையினை பின்பற்றுகின்ற ஆண், பெண்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

SHIA

இராப்போசன விருந்துபசாரத்துடன் இடம் பெற்ற குறித்த துஆ குமைல் நிகழ்வில் தாய் தந்தையினை இழந்து ஆதரவற்ற நிலையில் வாழும் சிறுவர், சிறுமிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் குறித்த ஸியா முஸ்லிம் பிரிவினருடைய பாலை நகர் துஆ குமைல் நிகழ்வின் காணொளியானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s