-
ஓர் வரலாற்றுத் திருப்பத்தில் பாகிஸ்தான் இலங்கை கிரிக்கட் தொடர்
AF-90- துபாய்: இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடன் எதிர்வரும் 28 ம் திகதி கிரிக்கட் தொடரை ஆரம்பிக்கிறது.தொடரின் முதல் போட்டி துபாய் ஷேக் செய்யத் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.இச்சுற்றுப்போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, அதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை அணி பங்குகொள்ளும் முதலாவது பகலிரவு போட்டியாக அமையவுள்ளது.
-
“ரொஹிங்கியாக்களை நாடு கடத்தினால் தலாய்லாமாவையும் ஈழத்தமிழர்களையும் நாடு கடத்துவீர்களா..?” ஒமர் அப்துல்லாஹ்
ஸ்ரீநகர்: இந்தியாவில் தஞ்சமடைந்த ரொஹிங்யா முஸ்லிம்களைப் போல தலாய்லாமா உள்ளிட்ட திபெத் அகதிகளையும் ஈழத் தமிழ் அகதிகளையும் நாடு கடத்துமா மத்திய அரசு? என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஏழைகளின் கதவுகளையும் தட்டாமல் விடாத வசூல் குழுக்கள்!
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சமூக நெருக்கடிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடி மக்கள் கடந்த காலங்களிலும், சம காலங்களிலும் வாரி வழங்கியதை மறக்க முடியாது! அல்ஹம்துலில்லாஹ்!! பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் முகமாக காத்தான்குடியில் நேற்று நிவாரண வசூல் ஒன்று இடம்பெற்றது.
-
“வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும்”-டொனால்ட் டிரம்ப்
வோஷிங்டன் DC: அமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை நையாண்டி செய்து, “ராக்கெட் மனிதர், தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
-
ரோஹிங்யா முஸ்லீம்கள் விவகாரம்: இந்திய மத்திய அரசின் பிரமாண பத்திரத்தின் ரகசியம்
டெல்லி: ரோஹிங்யா முஸ்லீம்கள் தொடர்பாக எந்த ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார். மியான்மரில் நடைபெற்றுவரும் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு தாக்குதல்களுக்கு அஞ்சி பலரும் இந்தியாவில் அகதிகளாக வந்து குடியேறுகிறார்கள். அவர்களை இந்திய அரசு திருப்பியனுப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுக்க கோரி 2 ரோஹிங்யா முஸ்லீம்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை வரும் 18ம் தேதி கோர்ட்…
-
அம்பாறை தமிழ் பேசும் மக்கள் மீது சிங்களம் திணிப்பு; தேசிய முஸ்லிம் கவுன்ஸில் கவலை
அஸ்லம் எஸ்.மௌலானா அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றபோதிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு கச்சேரியினால் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் தனிச் சிங்கள மொழியில் அமைந்திருப்பதால் அரச அலுவலர்களும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தேசிய முஸ்லிம் கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது.
-
வெளியானது ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் எக்ஸ்
நியுயோர்க்: அப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வோட்ச் 3, டி.வி 4 கே உள்ளிட்ட தயாரிப்புகள் உலக சந்தையிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன. உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை இன்று (அமெரிக்க நேரப்படி) வெளியிட்டது.
-
“ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மர் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும்”- ஷேக் ஹசீனா
டாக்கா: மியான்மரிலுள்ள ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் தப்பியோடிய பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மர் திரும்ப ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.ஓர் அகதிகள் முகாமை பார்வையிட்டபோது பேசுகையில், எந்தக் குற்றமும் செய்யாத மக்கள் துன்புறுவதால், மனிதநேயத்தோடு இந்த நிலைமையை அணுக வேண்டும் என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
-
பல்லேகல கிரிக்கட் மைதானத்திலிருந்து முரளீதரன் பெயர் நீக்கம்
கண்டி: பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக அவரது தந்தை சி.முத்தையா தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (12) மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த முத்தையா இதற்கான தீர்வை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.
-
ரூ 62 இலட்சம் செலவில் காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலயத்துக்கு புதிய மாடி கட்டிடம்
CM மீடியா காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் 62 இலட்ச நிதியொதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி சாவியா மகளிர் பாடசாலைக்கான மாடிக்கட்டிடம் இன்று காலை (12) திறந்து வைத்து கையளிக்கப்பட்டது.
-
நுவரெலியா- கந்தபளை பிரதேசத்தில் அதிகூடிய மழை: மரக்கறித் தோட்டங்கள் பாதிப்பு
பா.திருஞானம் நுவரெவியா: தொடர்ந்து மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெவியா மாவட்டம் கந்தபளை பிரதேசத்தில் அதி கூடிய மழை பெய்துள்ளது. இதனால் மறக்கறி தோட்டங்கள் பல பாதிப்புக்குள்ளாகியுள்ளன.