AF-90- துபாய்: இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடன் எதிர்வரும் 28 ம் திகதி கிரிக்கட் தொடரை ஆரம்பிக்கிறது.தொடரின் முதல் போட்டி துபாய் ஷேக் செய்யத் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.இச்சுற்றுப்போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, அதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை அணி பங்குகொள்ளும் முதலாவது பகலிரவு போட்டியாக அமையவுள்ளது.
அது தவிர, 5 ஒரு நாள் மற்றும் 3 ரி20 போட்டிகளைக் கொண்டதாக இத்தொடர் அமையவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் நிலையில், இறுதி ரி20 போட்டி மாத்திரம் பாகிஸ்தானின் லாகூரில் எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மெத்திவ்ஸ், பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவரால் அப்போட்டியில் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2009 இல், இலங்கை அணியினர் மீது லாஹூரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடும் முதலாவது சர்வதேசப் போட்டியாகவும் இத்தொடர் அமைகிறது. AF-90