-
17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு உலக அழகிப்பட்டம்
சன்யா சிடி: இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் வோர்ல்ட்’ எனப்படும் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, 2000ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றார்.
-
உள்ளூராட்சித் தேர்தல்; வேட்புமனு கோரும் அறிவிப்பு 27 ஆம் திகதி
கொழும்பு: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வேட்பு மனுக்கான அறிவித்தலை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பு மனு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
-
காலி கின்தோட்டையில் ஊரடங்கு
காலி: கின்தோட்டை பகுதியில் ஏற்பட்ட அமைதி இன்மையை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அங்கு இருநூறிற்கும் அதிகமான பொலிஸாரும், 100க்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த சம்பவங்களின் அடிப்படையில் 07 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்
ஹராரே: ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. ” சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை” உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.
-
கடலில் மூழ்கிய சாய்ந்தமருது மாணவனின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் திருக்கோவிலில் கரையொதுங்கியது..!
அஸ்லம் எஸ். மௌலானா சாய்ந்தமருது: கடந்த சனிக்கிழமை (11) சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த மாணவனின் ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் அப்றின் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனின் ஜனாஸாவே இவ்வாறு கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
-
அறுபது வருடங்களுள் முதன்முதலாக உலகக்கிண்ண தகுதியை இழந்தது இத்தாலி
MJ கிஸப்பி மேஸா: உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் உலகமெங்கும் இடம்பெற்று வருகின்றன. கால்பந்தாட்ட அணிகளை அதிகமாகக் கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் கடும் பலப்பரீட்சையாகவே இருந்து வருகின்றன.
-
ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: 380 பேர் பலி
தெஹ்ரான்: ஈரான்-ஈராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 387 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள். அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது. ஈரானை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று, 70,000 மக்களுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாக கூறியுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியை சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில் மட்டும் 5,660 பேர் காயமடைந்துள்ளார்கள்.
-
ஏழு தமிழ் இளைஞர்களுடன் 27 வயதுடைய காத்தான்குடிப் பெண் ஒருவரும் கைது!
மட்டக்களப்பு: மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே குறித்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
கடவுச்சீட்டு, தே.அ.அட்டை சேவைக் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிப்பு
கொழும்பு: கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்ற அரச நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் திருத்தப்படாத கட்டணங்களே இவ்வாறு அதிகரிக்கப்படவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
-
2018 வரவு செலவுத் திட்டம்: ஒரே பார்வையில்
குறுஞ்செய்திகளுக்கு விசேட வரி 2020 – 2040 இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களும் எரிபொருள் பயன்படுத்தப்படாத வாகனங்களாகக் கொள்ளப்படும். பணவீக்கத்தை 6 வீதத்துக்கு கீழ் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும். 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறைவடையும்.
-
சாய்ந்தமருது மர்யம் பாத்திமா கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி
அஸ்லம் எஸ்.மௌலானா லண்டன்: கனடா நாட்டை தலைமையகமாகக் கொண்டியங்கும் “முஸ்லீம் வில்லே” (Muslim Ville) என்ற அரசசார்பற்ற தன்னார்வத்தொண்டர்கள் அமைப்பு, வளர்ந்து வரும் இஸ்லாமிய சிறார்களிடையே அல்குர் ஆன் மற்றும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துத்தும் நோக்குடன் சர்வதேச ரீதியில் வருடாந்தம் நடாத்தி வரும் 16ஆவது ஆண்டுக்கான போட்டித் தொடரில் ஐந்து வயதுக்குரிய சிறார்களுக்கான அல்குர்ஆன் சூராக்கள் மனனமிட்டு இராகத்துடன் ஓதிக் காண்பித்தல் மற்றும் இஸ்லாமிய அறிவுக்களஞ்சிய வினா விடைப் போட்டிகளில் ஐக்கிய ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட செல்வி…