2018 வரவு செலவுத் திட்டம்: ஒரே பார்வையில்

bgt2018e-news

குறுஞ்செய்திகளுக்கு விசேட வரி

2020 – 2040 இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களும் எரிபொருள் பயன்படுத்தப்படாத வாகனங்களாகக் கொள்ளப்படும்.

பணவீக்கத்தை 6 வீதத்துக்கு கீழ் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.

2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறைவடையும்.

எதிர்வரும் காலங்களில் வரையறைகளுடன் வாகன இறக்குமதி : எயார் பாக் இல்லாத வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது.

எதிர்வரும் காலங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை பெறல்.

சொகுசு வாகனங்களுக்கு 25 வீதம் வரி அதிகரிப்பு

பிளாஸ்டிக் உற்பத்திக்கு 10 வீத வரி

மின்சார முச்சக்கர வண்டி, மின்சார பஸ் இறக்குமதிக்கான வரி குறைப்பு
மீனவ, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் கல்கிஸை முதல் இரத்மலானை வரை கடற்கரையோரம் புனரமைப்பு

பின்னவல யானைகள் சரணாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

2500 வலுக் கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு வரி

டீசல் முச்சக்கர வண்டிகளுக்கு 50 ஆயிரம் ரூபா வரி அதிகரிப்பு
கழிவுகளை அகற்ற 5 வருடம் சலுகை வழங்கப்படும்

மனித வள அபிவிருத்திக்கு 75 மில்லியன் 3 வருடங்களில் எதிர்பார்ப்பு
மின்சார முச்சக்கர வண்டிகளுக்காக 90 வீத வரிச்சலுகை

பழைய முச்சக்கரவண்டி உரிமையாளர் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அவர்களின் வாகனங்ளை விற்பனை செய்ய வழிமுறை

காபன் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

திண்மக் கழிவு முகாமைக்கு 3000 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வன விலங்குகளை பாதுகாக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாட்டிலுள்ள களப்புகளை பாதுகாக்க மற்றும் புத்தாக்கம் செய்வதற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

முல்லைத்தீவு, நந்திக்கடல், நாயாறு உள்ளிட்ட 10 களப்புகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நகர்ப்புறங்களில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

புதிய பல்நோக்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க நடவடிக்கை

சுற்றுப்புறச் சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை

நானோ தொழில்நுட்பத்திற்கு சலுகை

காலநிலைத் திணைக்களத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

பசுமை திட்டத்தின் கீழ், ஓடு பாதைகள், நூலகம், தியான மையங்கள் அமைக்கப்படும்

கால்நடை வளர்ப்புக்கு 10 வீத வரிக் குறைப்பு

மழைநீர் சேகரிப்பு திட்டம், குளங்கள் நிர்மாணத்திற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடன் அட்டைகளுக்கான பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்

தெரிவுசெய்யப்பட்ட விவசாய உபகரணங்கள் : தேசத்தை கட்டியெழுப்பும்

வரிநீக்கம் 55 அடியைவிட நீண்ட படகு கொள்வனவுக்கு 50 வீத கடனை அரசாங்கம் வழங்கும்

கையடக்கத் தொலைபேசி கோபுரங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படும்
மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்

சிறுதொழில் செய்பவர்களுக்கு விசேட வரிச் சலுகை

மீன் குளிரூட்டிக்காக 50 வீதம் அரசின் பங்களிப்பு

சுயதொழிலில் ஈடுபட விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும்

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரக் கடன்களை பெறுவதற்கான எளிய நடைமுறை உருவாக்கப்படும்

விவசாயிகளுக்கு கடன் வழங்க விசேட கடன் நடவடிக்கை

புதிய பிணை தொடர்பிலான கடன் அறிமுகம்

கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வணிக திறன்களை மேம்படுத்த மேலும் சலுகைகள்

இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கு புதிய அபிவிருத்தி வங்கி நிறுவப்படும்

அரச தொழில்நுட்பத் துறைகளுக்கு 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

ஏற்றுமதி சந்தைக்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாய உபகரணங்களுக்கு வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஊக்கப்படுத்தல்

கறுவாப்பட்டை மற்றும் மிளகு உற்பத்தி அபிவிருத்திக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிறுதோட்ட தேயிலை உரிமையாளருக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தென்னை உற்பதிக்கு விசேட வரிக் குறைப்பு

மாணிக்கக் கல் பட்டை தீட்டுவதற்கு வரி நீக்கம்

இலங்கையில் மாணிக்கக் கல் பட்டை தீட்டும் மையங்களை மேம்படுத்த நடவடிக்கை

கப்பல் நிறுவனங்கள் தொடர்பில் முதலீடு செய்ய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்

நாட்டிலுள்ள தரமான நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்

ஜனாதிபதி பிரதேசம் என அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வேலைத்திட்டத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய 2200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

சுற்றுலாத் தலங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

நானு ஓயா, கொழும்பு, எல்ல ரயில் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

கறுவாத் தொழில் பயிற்சி பாடசாலை ஊக்குவிப்பு

விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மேம்படுத்தப்படும்

குக்குளு கங்கையை அபிவிருத்தி செய்ய வரி விலக்கு வழங்கப்படும்

ரோபோ தொழில்நுட்பத்திற்காக மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

மாதுறு ஓயா, கல் ஓயா ஆகியவற்றில் விசேட சவாரி சேவையை மேம்படுத்தல்

வாழைப்பழம் மற்றும் அன்னாசி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் கோழிப் பண்ணைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகளை விரிவாக்குவதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பு நிறுவனமொன்று அமைக்கப்படும்.

வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டு காணிகளை வாங்குவதற்கு வரையறை

எதிர்வரும் 2025இல் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்குகளால் அதிகரிக்கப்படும்

உள்நாட்டின் மலர் வர்த்தகத்தினை சர்வதேசம் வரை கொண்டு செல்ல தேசிய மலர்ச்சந்தையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய 10 பில்லியன் ரூபா

முச்சக்கரவண்டி தொழில் முனைவோரை அதிகரிக்க நடவடிக்கை

சகல மாணவர்களுக்கான உயர் கல்வி நடைமுறை

அனைவருக்கும் தரம் 13 வரை கட்டாயக் கல்வி

முச்சக்கரவண்டி சாரதிகளை சுற்றுலாப் பயண வழிகாட்டியாக்கும் வகையில்

இலவச பயிற்சி மற்றும் சுற்றுலா சபையின் அனுமதியுடன் Tuk Tuk என ஸ்டிக்கர் ஒன்றினை காட்சிப்படுத்தி சுற்றுலா துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

2500 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் ஒழுங்குமுறைப்படுத்த அதிகார சபையொன்று அமைக்கப்படும்

மாணவர்களுக்கு “டெப்” வழக்கும் நடைமுறை மேலும் மேம்படுத்தப்படும்

இளைஞர் கழகங்களுக்கு மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தொழில் மற்றும் திறன் பயிற்சி சாலைகளை அமைக்க அதிக கவனம் செலுத்தப்படும்

நாட்டில் மேலும் 5 தொழில்பயிற்சி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

இளைஞர்களுக்கு விசேட தொழிற்பயிற்சி பாடநெறி

நாட்டில் கணக்காளர்களை உருவாக்க விசேட திட்டம்

டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் தொழில் நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை

பாடசாலைகளில் ஸ்மார்ட் கல்வி அறைகள் ஸ்தாபிக்க 750 மில்லியன் ஒதுக்கீடு
ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி

மாணவர்களின் நலன்களை கருத்திற்கொண்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம்

பல்கலைக்கழகங்களில் வைத்திய கல்வியை மேம்படுத்த 1250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

உயர் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகத்திற்கு புதிய நூலக வசதி

நாட்டிலுள்ள தேசிய வைத்தியசாலைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை

கணிதம் போன்ற பாடங்களுடன் அழகியல் பாடங்களை கற்க உயர் தர மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்

சர்வதேச தரத்திற்கு விளையாட்டுத் துறை மேம்படுத்தப்படும்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம்

விளையாட்டு பயிற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம்

மாத்தளை ஹொக்கி விளையாட்டரங்கை மேம்படுத்த 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

நாட்டில் பல சுகாதாரத் திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை

நீரிழிவு வைத்தியசாலையை அமைக்க நடவடிக்கை

தொற்று நோய்களை தடுப்பதற்கான விசேட நடவடிக்கை

காலி, கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கினை சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

குளிர் பானங்களில் சேர்க்கப்படும் சீனியின் அளிவிற்கு இன்று நள்ளிரவு முதல் விஷேட வரி ஒரு கிராமிற்கு 50 சதம்

நாட்டிலுள்ள 100 கிராமப்புற விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

விளையாட்டுக்கு பயன்படுத்தும் பாதணிகளுக்கான வரி இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா நிதி உதவி
கொழும்புத் துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மதுபானங்களுக்கு NBT வரி விதிக்க தீர்மானம்

பாலியல் நோய்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

லயன் வீடுகளில் வாழுவோருக்கு 25000 ஆயிரம் வீடுகள் ; 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சர்வதேச குற்றங்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் 500 மில்லியன் ரூபா செலவில் விஷேட பொலிஸ் பல்கலைக்கழகம்

மத்திய அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடு
கூட்டு வௌ்ளப்பெருக்கிற்கு கட்டுப்பாட்டு முறை

குறைந்த வசதிகளைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சைபர் கிரைம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும்
பொலிஸ் சேவையை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு

பஸ் பயணத்திற்காக ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அமுல் படுத்த நடவடிக்கை

இரத்தினபுரி மற்றும் வெலிமடை நீதிமன்றங்களை பிறிதொரு ,இடத்தில் அமைக்க நடவடிக்கை

நகர்ப்புற மறுவாழ்வு திட்டத்திற்காக 24,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
மீள் குடியேற்றத்திற்கு விசேட நிதி ஒதுக்கீடு

எதிர்காலங்களில் இளவயது குற்றவாளிகள் மற்றும் பிரதிவாதிகள் வேறாக அழைத்துச் செல்லப்படுவர்

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்காக இந்நாட்டு இராணுவ சிப்பாய்களின் பாடநெறிக்காக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணைசெய்ய விசேட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நீதிமன்றம் அமைக்க 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தொல்பொருள் இடங்கள் பாதுகாக்க நடவடிக்கை

முன்னேஸ்வரம், அநுராதபுரம் உள்ளிட்ட மத வழிபாட்டு இடங்களில் யாத்திரிகர்களுக்கான ஓய்வறைகள் நிர்மாணிக்கப்படும்

கலைஞர்களுக்கான விசேட திட்டம்

அரச சேவையாளர்களுக்கு பொதுக்கொடுப்பனவு முறையொன்றை உருவாக்குதல்

புராதன மத வழிபாட்டுத்தலங்ககை புனர்நிர்மாணம் செய்ய 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தேசிய மதிப்பீட்டு கொள்கைகள் முறைமையை உருவாக்குதல்

அரச பணியாளர்களுக்கான குழந்தை பராமரிப்பு மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை

ஓய்வு பெற்றவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய உணவு காப்புறுதித் திட்டம்

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிற்கு 50 ஆயிரம் வீடுகள்

தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒரு வருடத்திற்கு நீக்க யோசனை

அரச வங்கிகளின் மூலதனச் சந்தைiய வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை

வடக்கில் விசேட தேவையுடைய பெண்களுக்கு வீட்டு திட்டம்

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் வாகன சலுகையை தொடர்ந்தம் அமுல்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்திற்கு நவீன பொருளாதார மையம்

“அக்ரஹார காப்புறுதித் திட்டம்” 2016 இற்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை

காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலக பணிகளுக்கு 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கில் விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

நேற்றையதினம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கபட்டன.

குறிப்பாக பருப்பு, கருவாடு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் எண்ணெய் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன

கருவாட்டின் விலை 750 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி நடவடிக்கைகளுக்கு 1000 ரூபாவுக்கு 20 வீதம் வரி

எதிர்வரும் காலங்களில் சுருட்டு புகையிலை விற்பனை செய்வதற்கான அனுமதி பெறப்படல் வேண்டும்

சட்டவிரோத மதுபான உற்பத்திகளுக்கு கடும் கலால் சட்டம்

கடனை மீள செலுத்துவதற்கு 3 வருடத்திற்கு விசேட வரி

சுங்க கட்டளைச்சட்டத்திற்காக புதிய கட்டமைப்பு

குறுஞ்செய்திகளுக்கு விசேட வரி

முகாமைத்துவ அமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

சட்டவிரோத சிகரெட்டுக்களை தடுப்பதற்காக சிகரெட் இறக்குமதியின் போது அனுமதி பத்திரம்

குறுஞ்செய்தி விளம்பரங்களுக்கு வரி

திரவமற்ற மதுப்பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் விசேட வரி அமுல்

2018 ஜனவரி முதலாம் திகதி முதல் மோட்டார் வாகனங்களுக்கான கடன் வசதி இல்லை

வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக வீடமைக்க 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற வீடமைப்பு நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க யோசனை

மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பஸ் தொடர்பில் காபன் வரியை அறிமுகப்படுத்த யோசனை

சர்வதேச பாதையில் நாட்டை அழைத்து செல்வதற்கு இது போன்ற

நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2018 ஆம்

ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தை தயாரிக்க உதவி அனைவருக்கும் நன்றி.

2018 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பிற்காக இன்றைய தினம் பாராளுமுன்றில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த வரவு- செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s