ஊழலை ஒழிக்க முனையும் கட்சிகளின் மகா தவறு

  • இனியவன்

election (3)காத்தான்குடி: உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் முஸ்பாத்திகளாக வழமைபோன்று காத்தான்குடியில் களைகட்டுகிறது. அல்லாஹ்வின் நாமத்தைக்கொண்டு ஆரம்பிக்கும் தேர்தல் மேடைகள், இறுதியில் ஒருவரை ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் கூட்டங்கள் நிறைவடைகின்றன.

கடந்த 2012 இல் காத்தான்குடி நகரசபையைக் கைப்பற்றிய ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணி, இதுவரையில் பல நூற்றுக்கணக்கான ஊழல்களை காத்தான்குடி நகரசபையை வைத்து காத்தான்குடியில் நிகழ்த்தியிருக்கிறது.

இதற்கான தெளிவான ஆதாரபூர்வமான ஆவணங்களை பலர் கைவசம் வைத்திருந்தும், ஊழலுக்கெல்லாம் ஊழல் பேர்வழிகளைக் கொண்ட நல்லாட்சி அரசாங்கம், ராஜாங்க அமைச்சரின் கீழுள்ள நகரசபை ஊழல்களை பலர் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

கடற்கரை சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவு, பொதுமைதான சர்வதேச அபிவிருத்தி, வடிகாண், வீதி அபிவிருத்தி, கழிவகற்றல் இயந்திரக் கொள்வனவு, குப்பை கொட்டுவதற்கான காணிக் கொள்வனவு, நூலக வாடகை விடயம் இப்படி ஆதாரபூர்வமான எத்தனையோ ஊழல் மோசடிகளை காத்தான்குடி நகரசபை கச்சிதமாக மேற்கொண்டிருக்கிறது.

இன்றைய தேர்தல் மேடைகளும் இவற்றை நிரூபித்து வருகின்றன.

நிலைமை இவ்வாறிருக்க, சிப்லி பாரூக் அணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும், குழுக்களும் ஊழலை ஒழிக்கவே தாங்கள் இத்தேர்தலில் களமிறங்குவதாக தங்களது தேர்தல் விளம்பரங்களில் தெளிவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர். விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்.

election (3)

Election victory 2015- Yourkattankudy image

இதுவரை இடம்பெற்றிருக்கும் இனியவன் கருத்துக் கணிப்பில் 37 வீதமான ஆதரவுகளையே ஹிஸ்புல்லாஹ் அணி பெற்றிருக்கிறது. இரண்டாவது அணியாக சிப்லி பாரூக் அணியும், மூன்றாவது அணியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இருப்பதை காத்தான்குடி தேர்தல் களம் தெளிவு படுத்துகிறது.

எவ்வாறிருந்த போதிலும், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சுமார் 57 வீதமானோரின் வாக்குகள் காத்தான்குடியில் இருக்கின்றன.

இந்த அரிய வாய்ப்பை சிதறிக் கேட்கும் இப்போதய அரசியல் கட்சிகளும், குழுக்களும் அன்று யோசித்திருந்தால், ஒரே சுயேட்சைக்குழுக்களின் கீழ் தேர்தலில் வெற்றிபெற்று, காத்தான்குடி நகர சபையை இலகுவாகக் கைப்பற்றி, இவர்களின் இன்றைய கனவுக்கு எட்டாத ஊழலை கட்சிதமாக ஒழித்து, மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக்கொடுத்திருக்க முடியும்.

அரிய வாய்ப்பு நழுவி இருக்கிறது.

வாக்குகள் கலைக்கப்பட்டிருக்கின்றன

பலத்த போட்டிகள் சில வட்டாரங்களில் இடம்பெறும்

பிரச்சாரப் பீரங்கிகள் காத்தான்குடியை அதிர வைக்கின்றன.

வேலையில்லா இளைஞர் பட்டாளம் தேர்தல் மேடை முஸ்பாத்திகளை இரசித்து மகிழ்கின்றனர்.

இதைவிட வேறு எதுவும் இப்போதைக்கு ஹைலைட்டாகக் கூற முடியாது.

வழமையான சமூகச் சீரழிவுகளும் தொடர்கின்றன.

இன்ஸா அல்லாஹ் விரைவில் சந்திப்போம்.

இனியவன்
யுவர்காத்தான்குடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s