ஸஹ்ரான் மௌலவியின் மௌனம் உணர்த்துவது என்ன..?

  • AK-79-YKK

zahranகாத்தான்குடி: தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் (முன்னாள்) பிரதம பிரச்சாரகர் மௌலவி எம்.சி.எம். ஸஹ்ரான், அவ்வமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக தே. தௌ. ஜமா (NTJ) அத்தின் கடிதத்தலைப்பைக் கொண்ட ஓர் அறிவித்தலை அண்மையில் முகநூலில் காணக்கிடைத்தது.

தொழிநுட்பம் அதி உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் இவ்வாறான அறிவித்தல்களை கண்மூடித்தனமாய் நம்ப முடியாது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் போன்றே ஓர் எடிட் செய்யப்பட்ட டிவிட்டர் பதிவு அண்மையில் உலகை வலம் வந்து, இப்பதிவு உண்மையில் ட்ரம்பினால் பதியப்பட்டது என்றே அதிகம் பேர் நம்பி இருந்தனர். எனினும் அது ஓர் “எடிட்” செய்யப்பட்ட பதிவு என்பதை உலகம் பின்னர் அறிந்தது.

இருந்தும் தே.தௌ. ஜஅத்தின் இவ்வறிக்கை ஊர்ஜிதமானதுதான் என்பதை அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

zahran

மௌலவி எம்.சி.எம். ஸஹ்ரான்

கடந்த 2009-2010 காலப்பகுதியில் தாருல் அத்ர் அத்தஹ்விய்யா அமைப்பிலிருந்து ஏற்பட்ட மார்க்க முரண்பாடுகள் காரணமாக தாருள் அத்ர் அமைப்பிலிருந்து மௌலவி ஸஹ்ரான் வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் 2010-2011 காலப்பகுதியில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை ஆரம்பித்து, மார்க்க, சமூக நலன் விடயங்களை வெற்றிகரமாக மௌலவி ஸஹ்ரான் தலைமையிலான குழு முன்னெடுத்து வந்தது.

இவற்றுள் இரத்ததானம், சிரமதானம்,வெள்ள அனர்த்த நிதி திரட்டல் போன்றவை பிரதானமானவை.

இதன் பின்னர் 2012 இல் தாருள் அத்ர் அமைப்பிற்கும், தே.தௌ.ஜ. அமைப்பிற்குமிடையில் கைகலப்புக்கள் இடம்பெற்றன.

NTJ

AK-79-YKK

அன்றிலிருந்து கடந்த வருடம் வரைக்கும் “தௌஹீத்வாதிகள்” என தங்களை அடையாளப்படுத்தும் பலர், மௌலவி ஸஹ்ரானுக்கு எதிராக பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வந்தனர்.

மௌலவி ஸஹ்ரானின் பொற்காலம் 2014-2015 வரையுள்ள காலமாகும்.

1979 இல் இருந்து இன்றுவரை பகிரங்கமாக “எல்லாம் அவனே” எனும் அத்வைதக் கொள்கையை காத்தான்குடியில் போதித்து, செயற்படுத்திவரும் மௌவி ஏ. ஜே. அப்துர் ரஊப் மிஸ்பாஹியை நேருக்கு நேர் எதிர்ப்பதில் மார்க்கம் கற்றவர்கள் பின்னின்றபோதும், தான் துணிந்து தனது அமைப்பினூடாக அப்துர் ரஊப் மௌலவியின் கொள்கைக்கு வரிக்கு வரி விளக்கம் கொடுத்து, அவரது கொள்கையை பொய்ப்பித்து, சமூகத்துக்கு உண்மையை எடுத்துரைத்தார். வெற்றியும் கண்டார்.

ntj zahran

AK-79-YKK

இதன் பின்னர், பலத்த அரசியல் செல்வாக்குகளின் பின்னணியில் இயங்கிவரும் அப்துர் ரஊப் மௌலவி தரப்பு, என்ன பாடுபட்டாவது, எவ்வளவு “விலை” கொடுத்தாவது ஸஹ்ரான் மௌலவியை “அடக்க” வேண்டும் என்ற செயற்படுத்தலில் ஈடுபட்டனர்.

பொலிஸ் விசாரணை, இராணுவ விசாரணை, நீதி மன்றம் என்று சென்றுகொண்டிருந்த நிலையில், இறுதியாக கடந்த வருடம் மௌலவி ஸஹ்ரானும் அதன் அமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் அலியார் சந்திக் கலவரத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர்.

குறிப்பாக மௌலவி ஸஹ்ரானின் சிறைவாசம் ஊரில் இனி அமைதி ஏற்பட்டுவிட்டதாகவும், குழப்பங்கள் குறைந்துவிட்டதாகவும் உலமாக்களும், தௌஹீத்வாதிகளும், அரசியல்வாதிகளும் பெருமூச்சுவிட்டு நிம்மதியடைந்தனர். காரியம் கச்சிதமாக நிறைவேறியதால் அப்துர் ரஊப் தரப்பினருக்கும் மட்டில்லா ஆனந்தம்.

என்னதான் சர்வதேசப் பிறைவிடயத்தில் ஊர் இரண்டுபட்டாலும், வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கு அவரது சர்வதேசப் பிறை விடயமும் விளக்கமும் தெளிவைக் கொடுத்தது. அவரது வாராந்த பயான்களும், ஜூம்ஆ உரைகளும் மக்களை ஓர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

ntj flood appeal

AK-79-YKK

மௌலவி ஸஹ்ரானை பலர் எதிர்த்த போதிலும், இஸ்லாமிய மாநாடுகள், ஷிர்க் ஒழிப்பு மாநாடுகள் போன்றவற்றில் கலந்துகொள்வதில் ஊர் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்திருந்தனர்.

இதனைவிடவும் வெளிநாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள்  அவரது நிகழ்ச்சிகளை நேரடியாகவும், மீள் பதிவேற்ற வடிவத்திலும் கண்டு மகிழ்ந்தனர்.

இதன் காரணமாக பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்களில் இடம்பெறும் கலாசார சீரழிவுகள் குறைந்திருந்தன.

ஊருக்குள்ளும் கலாசார சீரழிவுகள் குறைந்திருந்தன. மக்கள் ஈமானோடு ஓர் அளவிலாவது தொடர்பில் இருப்பதாக உணரப்பட்டது.

ntj (4)

AK-79-YKK

இப்போது தேர்தல் காலம். கலாசார சீரழிவுகளை யாரும் கண்டு கொள்வதில்லை. தனது வீட்டில் என்ன சீரழிவுகள் இடம்பெற்றாலும் பரவாயில்லை. இது தேர்தல் காலம். தேர்தல் சம்பந்தமான எண்ணமாகவே சமுதாயத்தின் சிந்தனைகள் இருக்கின்றன. இதனால்தான் காலை விழித்தெழுந்தது முதல், இரவுத் தூக்கம் வரைக்கும் யாரைப்பார்த்தாலும் வாயில் அரசியல் வார்த்தைகள், முகநூலில் அரசியல் வரிகள் சமூகத்தை சூழ்ந்திருக்கிறது.

தாங்கள் யாருக்கும் பயப்படப் போவதில்லை என்றும், தனது மரணம்வரைக்கும் சத்தியத்தை நிலைநாட்டுவதாகவும் தனது பல உரைகளில் மௌலவி ஸஹ்ரான் தெரிவித்து வந்தார்.

தன்னைப்பற்றிய, தனது மனைவி, தனது குடும்பம் பற்றிய அவதூறுகளுக்கு தனது ‘ஹயாத்’தோடேயே மக்களுக்கு அதுபற்றிய விளக்கத்தைக் கொடுத்தார்.

ntj hizbullah

AK-79-YKK

யுவர்காத்தான்குடி இணையத்தளத்தில்கூட

மௌலவி ஸஹ்றானைச் சூழப்பட்டுள்ள கருப்பு வட்டம்

 என ஓர் கட்டுரை 2015 இல் வெளிவந்தது. அது போலவே அவருக்கான ஆபத்துக்களும் அச்சுறுத்தல்களும் அவரது கழுத்தை நெறிக்கும்வரை வந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இல்லையென்றால், காத்தான்குடி வரலாறு பேசும்  ஸஹ்ரான் மௌலவி, இந்தளவு சிறகுடைந்த பறவையாய் முடங்கிக்கிடக்க மாட்டார்.

இச் சமூகத்திற்கு அவர் பதில் தர வேண்டும்.

ஏ.கே. 79 வை.கே.கே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s