Category: Your Kattankudy
-
கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு
கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
-
பறகஹதெனிய இஸ்லாமிய தேசிய மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்
-SHM பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் நடைபெற்ற இருநாள்வதிவிட இஸ்லாமிய தேசிய மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.கோவை எஸ்.ஐயுப் , அமைச்சர் றிசாட் பதியுதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்த மக்கள் அலையின் ஒரு பகுதியினரை இங்கு காணலாம்.
-
சிறுவர் பாதுகாப்பு தினம்
ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது. இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு தமக்கிருக்கிறது. இவ்வாறான நிலையில் இவர்களை பாதுகாக்கும் தலையாய கடமை, நம் அனைவருக்கும் இருக்கிறது. சர்வதேச சிறுவர் தினத்தை பற்றி பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களை கணக் கிட்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஒக்டோபர் 01ம் திகதி சிறுவர் தினமாகவும், அனைத்துலக குழந்தைகள் தினமாக டிசம்பர் 14ம் திகதியும் கொண்டாடப்படு கின்றது.
-
மட்டு. கிரான்குளத்தில் காணாமல்போன மூன்று சிறுமிகள் மாமாங்கம் பகுதியில் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் இன்று அறநெறிப் பாடசாலைக்குச் சென்ற பதினொரு வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகள் இதுவரையில் வீடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் சர்மிளா, திவ்வியா, பஸ்மிதா ஆகிய மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
-
ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
கண்டி மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக ஆடு, மாடு முதலான மிருகங்களை அறுக்கக்கூடாது அவ்வாறு அறுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரும் பிரேரணை ஒன்று கண்டி மாநகர சபை மாதாந்தக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியது. எனினும் இரு அங்கத்தவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வெட்டுவது கண்டி நிலையத்தை உடனடியாக மூடி அங்கு ஒரு மிருக வைத்திய நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் காத்தான்குடி நகரசபையிலிருந்து மீளழைப்பு – புதிய நகரசபை உறுப்பினராக சூறாசபை உறுப்பினர் MHA.நஸீர் நியமனம்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீள் அழைத்தல் கொள்கைக்கமைவாகவும், சூறாசபையின் தீர்மானத்துக்கமைவாகவும் காத்தான்குடி நகரசபை உறுப்பினராக கடமையாற்றி வந்த பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்கள் 2809.2012 முதல் தனது நகரசபை பிரதிநிதித்துவத்தினை இராஜினாமாச் செய்துள்ளார்.
-
பேஸ்புக் நண்பன்
– செயின் தம்பி ஸியாம் (கல்முனை) “நான் ஓ..எல்..எக்ஸ்சாம் எழுதியிருக்கன் சேர் அட்வான்ஸ் லெவல் படிக்க இருப்பேனோ என்னவோ” என்று தளர்ந்த குரலில் முகப்புத்தக்கத்தில் சட் பண்ணிக்கொண்டிருந்தவன் வெகுநேரமாக அழுதுகொண்டிருந்தான் என்பதை என்னால் உணர முடிந்தது. ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்த எனக்கு அவனது துடிதுடிப்பும் பதறலும் உணர்ச்சியின் உந்துதல்களும் இதயத்தை முட்களாய் தைக்கத் துவங்கின….. வழக்கம் போலவே மாலை வேளைகளில் பிரத்தியேக வகுப்புகள் இல்லாத சந்தர்ப்பங்களில் முகப்புத்தகத்தில் குந்திக்கொண்டிருபது எனக்கு பழக்கப்பட்டுப்போன விஷயம். வாழ்க்கையில் தோற்றுப்போன…
-
கிழக்கு மாகாண சபையில் மூவின சமத்துவம்;பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு முதல்வர் உரை
கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக இல்லாத குறைபாட்டை நிச்சயமாக நிவர்த்தி செய்வேன். மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் மாநாட்டு மண்ட பத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரை யாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
நஜீப் கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் கடமைகளை நேற்று பொறுப்பேற்ற போது எடுத்த படம். (தினகரன்)
-
புதிதாக அதிபர், ஆசிரியர்கள் 6000 பேருக்கு அக்டோபர் 2ல் நியமனம்
நாட்டிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றவென மேலும் 6000 அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவிக்கிறது. இலங்கை அதிபர் சேவை தரம் 2, தரம் 3 ஆகிய இரு தரப்பினர்களுக்கும் 3000 அதிபர்களும், இலங்கை ஆசிரியர் சேவை 3க்கு 3000 பட்டதாரி ஆசிரியர்களும் புதிதாக நியமனம் பெறவுள்ளனர்.
-
புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு ஜனாதிபதி கௌவரம்!
இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற காலி ரிச்மன்ட் வித்தியாலய மாணவன் கிசர சந்தலுக கொடிதுவக்கு ஜனாதிபதியால் கொளரவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டார். தமது பிள்ளைக்கு கல்வியில் ஊக்கமளித்த பெற்றோரையூம் ஜனாதிபதி பாராட்டினார்.
-
தம்புள்ளையில்ஒக்டோபர் இறுதியோடு மக்களை வெளியேறச் சொல்லி நோட்டீஸ்: கடிதம் இணைப்பு
இலங்கையின் தம்புள்ளையில் வணக்கத்திற்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் வீடுகளையும் கடைகளையும் வைத்திருப்பவர்கள் ஒக்டோபர் இறுதிக்குள் அவற்றை காலிசெய்ய வேண்டுமென நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி நகர அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவியாக இந்த நடவடிக்கை அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.