Category: Your Kattankudy
-
ஆசிரியர்கள் உரிய பாடசாலைக்கு செல்ல மறுத்தால் நியமனம் ரத்து: ஜனாதிபதி
பாடசாலைகளின் பெயர் குறித்து நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்குச் செல்ல மறுத்தால் அவர்களின் நியமனங்கள் ரத்துச்செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார். ஏற்கனவே பலமுறை இது குறித்துத் தாம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய் வதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆசிரியர் நியமனத்தின்போது தற்போது பெயர்குறிப்பிட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், பல வழிகளில் செல்வாக்குகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தமது பாடசாலைகளைத் தமக்கு வசதியாக ஏற்படுத்திக்…
-
T20 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள்
-MJ இலங்கையில் மிக அபாரமாக இடம்பெற்று வந்த உலக இருபது 20 கிண்ணத்திற்கான போட்டிகள் இறுதிச் சுற்றை அடைந்திருக்கின்றன. இவ் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இம்முறைக்கான உலகக் கிண்ணத்தை மேற்கிந்தியத்தீவுகள் வெற்றிபெறும் என உலக விளையாட்டு வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இத்தொடரில் பல தோல்விகளைப் பெற்றிருந்ததால் இக்கருத்துக்கணிப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டு, ‘இல்லை’ என்று வாக்களிக்கும் அளவுக்கு இவ் அணியின் நிலைமை இருந்தது.
-
இலங்கை அணியின் வெற்றியும் காத்தான்குடியை அதிரவைத்த பட்டாசு ஒலிகளும்..
-MJ நேற்று மாலை இடம்பெற்ற உலகக் கிண்ண இருபது 20 போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது.
-
அரச விருதைப் புறக்கணித்து ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவும்: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்
உலக ஆசிரியர் தினத்தையொட்டி அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரச விருதைப்புறக்கணித்து ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அதிபர் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உலக ஆசிரியர் தினம் தொடர்பான தேசிய தின நிகழ்வு நாளை 6 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருப்பதுடன் அதில் அதிபர் ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுமுள்ளனர்.
-
நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி
உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் ‘முகம்மத்’ உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.
-
இலங்கை பாகிஸ்தான் அரை இறுதி…..
-MJ உலக இருபது 20 கிண்ணத்துக்கான அரை இறுதிப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 07:00 மணிக்கு கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இலங்கை அரைஇறுதிப் போட்டிக்கு வருவதற்குச் செய்த தியாகங்களைப் பார்க்கிலும் அதிக தியாகத்துடன் பாக்கிஸ்தான் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது.
-
இலங்கை அணியின் தந்திரம்
இங்கிலாந்துக்கெதிரான டி20 உலகக் கிண்ணத் தொடரின் “சூப்பர்-8” போட்டியில், இலங்கை அணியின் அணித்தலைவராக சங்கக்காரா செயல்பட்டதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது. இலங்கையில் நான்காவது டி20 உலகக் கிண்ணத் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான “சூப்பர்-8” போட்டியில், தாமதமாக பந்து வீசிய இலங்கை அணியின் அணித்லைவர் மஹேல ஜெயவர்த்தனவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
பிரதான பஸ் தரிப்பு நிலையங்களில் CC TV கமராக்கள்
நாட்டிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடங்களில் சி.சி.ரீ.வி. கமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. தனியார் பஸ்களிடமிருந்து கப்பம் பெறப்படுவது மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் இவ்வாறு சி.சி. ரீ.வி. கெமராக்களை பொறுத்த உள்ளதாக ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
-
‘திவிநெகும’ சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்
* ஆதரவாக 21 வாக்குகள் * எதிராக 15 வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து வாக்களிப்பு திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை நேற்று முழுமையான அங்கீகாரம் வழங்கியது. இந்த சட்ட மூலம் 6 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
-
இனிமையான குணம், இனவாதமற்ற சிந்தனைக்கு கிடைத்த சன்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமான குடும்ப மாக இருந்து மூதூர் தொகுதியிலுள்ள மக்களிடையே கைசின்னத்தை வேரூன்ற வைத்த ஏ. எல். அப்துல் மஜீதின் (முன்னாள் அமைச்சர்) புதல்வரான நஜீப் ஏ. மஜீதின் கட்சி விசுவாசத்திற்கு கிடைத்த பரிசே கிழக்கு முதலமைச்சர் பதவியாகும். தான் எதிர்கொண்ட சகல தேர்தல்களிலும் கட்சி விசுவாசத்தைப் பேணி வந்த நஜீப் ஏ மஜீப் எந்த மேடைகளிலும் இனவாதம் பேசியதில்லை. 1989 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட அழைக்கப்பட்ட…
-
விஞ்ஞானம், கணித பட்டதாரிகள் 1000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம்
விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும். இந்நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகி யுள்ளதென கல்விய மைச்சர் பந்துல குணவர்தன தெரிவித் தார். தெரிவு செய்யப்பட்டுள்ள ஆயிரம் விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி களுக்கு, தாங்கள் கடமையாற்றப்பட வேண்டிய பாடசாலையின் பெயருடன் கூடியதாகவே நியமனங்கள் வழங்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
2500 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் ஜனாதிபதி வழங்கினார்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றுள்ள பெற்றோரின் 2500 குழந்தைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புலமைப் பரிசில் வழங்கினார்.