Author: yourkattankudy.com
-
மட்டக்களப்பு சிங்கள மக்களின் மீள்குடியேற்றம்; ஆளுநர் ஆராய்கிறார்
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று சனிக்கிழமை மட்டக்களப்புக்கு சென்று போருக்குப் பின்னரான சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள பௌத்த அமைப்புகளின் அழைப்பின் பேரிலேயே அவர் மட்டக்களப்பு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.
-
237 ஓட்டங்கள்: கப்தில் புதிய உலக கோப்பை சாதனை
வெலிங்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் மிக அதிகமான ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நியுசிலாந்து வீரர் மார்டின் கப்தில் படைத்துள்ளார்.நேற்று சனிக்கிழமை நடந்த நான்காவது காலிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை நியுசிலாந்து எளிதாக வீழ்த்தியபோது கப்தில் 237 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு
– இர்ஷாத் ரஹ்மதுல்லா வவுனியா: சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தில் (International vocational academy) தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு நேற்று 21-03-2015 வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
-
மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலில் புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி- 06 பாவா லேனிலுள்ள மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் 35 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழா 21-03-2015 இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
-
‘அறிவார்ந்த ஆற்றல்களால் ஆளுமைகள் வளர்த்தெடுப்போம்’ NFGGயின் மகளிர் அணியின் மகளிர் தின நிகழ்வுகள்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘அறிவார்ந்த ஆற்றல்களால் ஆளுமைகள் வளர்த்தெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின நிகழ்வுகள் நேற்று மாலை (20.03.2015) மஞ்சந்தொடுவாயில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2015 சாதனையாளர் பாராட்டு விழாவும் இகௌரவிப்பு நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2015 சாதனையாளர் பாராட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்- 21-03-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தில் இயங்கிவரும் மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது இரத்ததான முகாம் 21-03-2015 இன்று சனிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
ஷீஆ ஊடுறுவல்: கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் எச்சரிக்கை!!
– எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் அதிகளவான முஸ்லிம் மக்கள் செரித்து வாழும் தொகுதியாகும் இங்கு அன்மைகாலமாக ஷீஆக்களின் ஊடுருவல் அதிவேகமாக பரவி வருகின்றது. என்பதனை அவதானிக்க முடிகின்றது.
-
நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 151 வது பொலிஸ் வீரர்கள் தினம் -இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 151 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மாவட்டத்தின் பிரதான நிகழ்வு 21-03-2015 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் வாகிஷ்ட கலந்து கொண்டு இலங்கை பொலிஸ் படையின் கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
-
வடக்கு மாகாண பட்டாதாரி ஆசிரிய நியமனம்; அரசியலுக்கு அப்பால் தகைமைக்கு முன்னுரிமை வழங்கப்படும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்னார்: கடந்தவாரம் இடம்பெற்ற வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனத்துக்கான பொதுதேர்வு பரீட்சையினைத் தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் அதற்குரிய நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புகள் பரீட்சையில் தகைமையை எய்திய மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
-
சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார். மேற்படி இம் மக்கள் சந்திப்பு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் காரியாலத்தில் இடம்பெற்றது.