237 ஓட்டங்கள்: கப்தில் புதிய உலக கோப்பை சாதனை

guptil newzealandவெலிங்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் மிக அதிகமான ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நியுசிலாந்து வீரர் மார்டின் கப்தில் படைத்துள்ளார்.நேற்று சனிக்கிழமை நடந்த நான்காவது காலிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை நியுசிலாந்து எளிதாக வீழ்த்தியபோது கப்தில் 237 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

163 பந்துகளில் குப்தில் ஆடிய அற்புதமான இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 24 பவுண்டரிகளும் அடங்கும். இந்த உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் சிம்பாப்வே எதிராக குவித்திருந்த 215 ரன்கள்தான் உலகக் கோப்பை வரலாற்றில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஒரு ஆட்டத்தில் அடித்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

guptil newzealand

ஆனால் கிறிஸ் கெய்லின் சாதனையை இரண்டாம் நிலைக்கு தள்ளும்படியாக கப்திலின் அதிரடி ஆட்டம் அமைந்துவிட்டது. நியுசிலாந்து முதலில் 393 ரன்களை குவித்திருந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளால் 250 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

Published by

Leave a comment