Author: yourkattankudy.com
-
அஸ்ரப் புலமை பரிசில் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: நாம் மற்றும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வறுமையினை காரணம் காட்டி கல்விக்கு முடிச்சு போடவோமெனில் எமது சமூகம் 3 ஆம் தரத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார்.
-
பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஸ்லைக் வசதி பேஸ்புக்கில் வருமா?
AF-90 கலிபோனியா: பயனாளர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ள டிஸ்லைக் (dislike) வசதியை பேஸ்புக் ஏற்படுத்தி தர விரும்பவில்லை. பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) மார்க் சுக்கர்பேர்க் இந்த தகவலை சூசகமாக தெரிவித்தார். அதேநேரம், டிஸ்லைக்கிற்கு ஈடாக வேறு ஒரு வசதியை தரப்போவதாக சொல்ல அவர் மறக்கவில்லை.
-
‘இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’
ஜெனிவா: இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது. அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துவிச்சக்கர வண்டிகளில் (டைனமோ) இல்லாமல் காணப்பட்ட 100 துவிச்சக்கரவண்டிகளை பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றினர்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: துவிச்சக்கர வண்டிகளினால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவினால் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துவிச்சக்கர வண்டிகளில் (டைனமோ) மின் பிறப்பாக்கி இல்லாமல் காணப்பட்ட 100 துவிச்சக்கரவண்டிகளை இரண்டு தினங்களில் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தெரிவித்தார்.
-
தலைவர் ஞாபகார்த்த நினைவுகள்
ஹாசிப் யாஸீன் கல்முனை: சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்முனைத் தொகுதியிலுள்ள பல பாடசாலைகளில் தலைவர் தின நிகழ்வுகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் இன்று (16) புதன்கிழமை இடம்பெற்றது.
-
அநாகரிக ஆணுறை விளம்பரங்களுக்கு பாக்கிஸ்தானில் தடை
எம்.ஐ. அப்துல் நஸார் லாஹூர்: திங்களன்று பாக்கிஸ்தானின் ஊடகக் ஒழுங்கமைப்பு ஒரு வியாபா நிறுவத்தின் ஆணுறை விளம்பத்தினை, அது ஒழுக்கக் கேடானதாகவும், மத நெறிகளுக்குப் புறம்பானதுமாக இருப்பதாக மக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தததையடுத்து அந்த விளம்பரத்திற்கு தடை செய்துள்ளது.
-
ஹிஸ்புல்லாஹ் இன்று (16) பம்பலப்பிட்டியிலுள்ள தனது அமைச்சுக் காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்றுக் கொண்டார்
கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (16) பம்பலப்பிட்டியிலுள்ள தனது அமைச்சுக் காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இங்கு உரையாற்றும் பொழுது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டிருப்பதானது ஒரு பெருமையான விடயமாக கருதுவாதாக குறிப்பிட்டார்.
-
கிழக்கு மாகாண சபை: ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர் வெற்றிடங்களுக்கு, இருவர் பதவிப் பிரமாணம்
திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமாகக் காணப்பட்ட ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர் வெற்றிடங்களுக்கு, இருவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-
தனித்துவ அரசியலுக்கு வித்திட்ட முஸ்லிம் தலைவர் அஷ்ரப்
இலங்கையில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஆரம்ப காலம் முதல் இந்நாட்டு மன்னர்களுடனும். ஆட்சியாளர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணியவர்களாகவும் ஆட்சி நிர்வாகத்தில் பங்குபற்றியவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்நாடு சுதந்திரமடைந்த பின்னரும் 1980 கள் வரையும் இதே நிலைதான் தொடர்ந்து வந்தது.
-
ஷியா பள்ளிவாசல் மீது தாக்குதல்: குவைத்தில் 7 பேருக்கு மரண தண்டனை
குவைத்: குவைத் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில், அங்குள்ள நீதிமன்றம் ஒன்று ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.அந்தத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இதர எட்டு நபர்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை, இந்திய தலைவர்களும் அந்த 4 ஒப்பந்தங்களும்
டெல்லி: இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு பிரதமர் நரேந்திரசிங் மோடியுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இதன் அடிப்படையில் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு தலைவர்களும் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
-
மக்கா ஹரம் விபத்துக்கு பேஸ்புக்கில் மகிழ்ச்சி வெளிப்படுத்திய தமிழக பாஜக நிர்வாகி கைது!
– AF-90 மதுரை: மக்கா ஹரத்தில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்த நிலையில், அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த தமிழக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது பேஸ்புக் பதிவில், மக்கா ஹரத்தில் சமீபத்தில் நடந்த விபத்தில் முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை வரவேற்று மகிழ்ச்சியடைவதாக கருத்து பதிவு செய்திருந்தார்.