கிழக்கு மாகாண சபை: ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர் வெற்றிடங்களுக்கு, இருவர் பதவிப் பிரமாணம்

Eastern provinceதிருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமாகக் காணப்பட்ட ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர் வெற்றிடங்களுக்கு, இருவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் வெற்றிடத்திற்கு டொக்டர் அருண சிறிசேனவும் அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தயாகமகேவின் இடத்திற்கு மெத்தானந்த சில்வாவும் இவ்வாறு பதவியேற்றுக் கொண்டனர்.

Eastern province

மாகாணசபையின் தலைவர் சந்திரதாச கலப்பதியின் முன்னிலையில் இவர்கள் இருவரும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதோடு, இந்நிகழ்வு சந்திரதாச கலப்பதியின் வீட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன தொழில் ரீதியாக ஒரு வைத்தியராவார். இவர் தற்போது ஐ.தே.கவின் சேருவில ஆசனத்தின் அமைப்பாளராவார்.

மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த சில்வா, தமண பிரதேச செயலகத்தின் தலைவராக கடமையாற்றினார் என்பதோடு, சிறிது காலம் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment