ரியாத்: இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ‘இரத்த ஆறில் மூழ்கிக்கொண்டிருக்கும் எகிப்து மக்களுக்காக அரபு நாடுகள் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தருனம் இது’ என, சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீவிரவாத செயற்பாடுகளை எகிப்தில் அகற்றி அம்மக்களுக்கான இயல்பு நிலையை மீண்டும் அங்கு ஏற்படுத்த வேண்டும் எனவும், அனைத்து அரபு நாடுகளும், எகிப்து முஸ்லிம் சகோதரர்கள் கொல்லப்படுவதை ஓரணியில் நின்று கண்டிக்க வேண்டும் எனவும் உருக்கமான வேண்டுகோளை சற்று முன்னர் விடுத்திருந்தார்.
முன்னால் எகிப்தின் தலைவர் ஹொஸ்னி முபாரக், காலப்பகுதியில் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் வலுப்பெற்றிருந்ததுடன், மொர்ஸியின் ஆட்சியின் போது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக சவூதி அரேபியா வழங்கி இருந்தது. எனினும் மொர்ஸியின் ஆட்சியில் இருநாடுகளுக்குமிடையே விரிசல்கள் சில ஏற்பட்டிருந்தன.
இதுவரைக்கும் 800 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கும் இந்நிலையில், மன்னர் அப்துல்லாஹ் எகிப்து இராணுவத்துக்கு ஆதரவாக பேசி இருப்பதாக சிலர் தெரவித்தாலும், மன்னர் அப்துலல்லாஹ் எகிப்தின் விடுதலைக்காக முதன் முதலாக குரல் கொடுத்திருப்பது அரபுலகத்தை திசை திருப்பியுள்ளது.

Leave a reply to Husni Cancel reply