-
சஹ்ரான் ஹாசிமின் மனைவியினதும் மகளினதும் உயிருக்கு ஆபத்தில்லை
அம்பாறை: சம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முகமட் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாதியாவிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
குண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரினால் தேடப்பட்டு வந்த குறித்த 6 பேரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை (25) ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.
-
காத்தான்குடி பள்ளிவாயல் ஒன்றில் குனூத் ஓதாத வாலிபனை பேட்டி கண்ட போது
புதிய காத்தான்குடியின் முக்கியமான ஒரு பள்ளிவாசலில் ளுஹர் தொழுகை நேரம் கடைசி ரக்கத்தில் நாட்டுநிலைமையை கருத்திற்கொண்டு ஜம்மிய்யத்துல் உலமாவின் வழிகாட்டலுக்கினங்க குனூத் ஓதப்பட்டது, நான் உட்பட பலர் கவலையோடு அந்த பிரார்த்தனையில் ஈடுபட்ட போதும், அருகில் இருந்த ஒரு 15 வயது வாலிபன் குனூத்திற்கு கையேந்தாமல் தொழுகையை நிறைவேற்றினான்.
-
அனைத்து வகையான முகமூடிகளுக்கும் நாளை (ஏப் 29) முதல் தடை
தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில், தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்த தடையாக இருக்கும் வகையிலான, அனைத்து வகையான முகமூடிகளுக்கும் நாளை (ஏப் 29) முதல் தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை – ஜனாதிபதி ஊடக பிரிவு
-
மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் காத்தான்குடியைச் சேர்ந்த ஆஸாத்
காத்தான்குடி: மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர்.
-
ஸஹ்ரானின் சாரதி கைது
காத்தான்குடி: தீவிரவாத தாக்குதல்களுக்கு தலைமை வகித்த மொஹம்மட் ஸஹ்ரான் என்பவரின் சாரதியை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கபூர்’ என அழைக்கப்படும் மொஹம்மட் ஷரீப் ஆதம்லெப்பை (53) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
-
தொடர்ந்தும் ஊரடங்கு
இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு அமுல்; கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு. – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
-
33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் இடைநிறுத்தம்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 33வது வருட கந்தூரிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.
-
கல்முனை குண்டுவெடிப்பு: 15 சடலங்கள் கண்டெடுப்பு – 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்
சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என போலீஸ் உடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆறு பேரில், மூன்று பேர் தங்களது குடும்பத்துடன் இறந்துள்ளனர்.
-
வெடிமருந்துடன் வெள்ளவத்தையில் மூவர் கைது
ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்துடன், கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கிலோ கிராம் C4 வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.
-
சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம்
அம்பாறை: சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
-
சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி?
நன்றியுடன் பிபிசி தமிழ் அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர். வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர் பிறந்து வளர்ந்த ஊர்தான் காத்தான்குடி.