WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நான் அமெரிக்கன் அல்ல இலங்கையன்: கோத்தாபய

    கொழும்பு: நான் அமெரிக்கன் அல்ல இலங்கையன் கடந்த  ஏப்ரல் மாதத்துடன் இரட்டை  பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது  ஆகவே  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எவ்வித தடைகளும் தனக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (22) இடம்பெற்ற  உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான  சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  • மற்றுமொரு தேர்தல் நகைச்சுவை விருந்து..?

    கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  • இந்த வருட நகைச்சுவை** “முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறங்குவது சிறப்பு” – நஸீர் அஹமட்

    எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என்­பதை உறுதி செய்­யப்­போ­கின்­றது.  எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்­த­கை­யது என்­பதை வெளிக்­காட்டும் விதத்தில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்தி அவ­ருக்கு ஒட்­டு­மொத்­த­மாக தமது முத­லா­வது வாக்கை அளிக்­க­வேண்டும்.

  • “நான் இன வெறியாளர் அல்ல” – ஜாகிர் நாயக்

    கோலாலம்பூர்: தாம் ஒரு இன வெறியாளர் அல்ல என்றும், அண்மைய தமது பேச்சுக்கள் யார் மனதையேனும் புண்படுத்தி இருப்பின் அதற்காக வருந்துவதாகவும் மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார். எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, சமூகத்தையோ வருத்தமடையச் செய்வது தமது நோக்கம் அல்ல என்றும், அப்படிப்பட்ட செயல்பாடு இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் செவ்வாய்க்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • பிரபாகரன் ரணிலை விரும்பியதில்லை என்று மஹிந்த கூறுவது உண்மையா ? புலிகளை பலவீனப்படுத்தியது யார் ?

    முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பிரபாகரனை புகழ்கின்ற பிரச்சாரத்தை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.  பிரபாகரன் கொள்கை உறுதியுள்ளவர் என்றும், ரணிலை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் அதனாலேயே 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

  • கோட்டாபய ராஜபக்ஷ

    நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

  • மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்ய உத்தரவு

    கொழும்பு: இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பாரிய நிதி மோசடியின் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பிக்க ஜானகி ராஜரத்ன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  • 21/4 தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில் ;13.4 கோடி ரூபா பணம், 100 கோடி ரூபா சொத்துக்கள்

    கொழும்பு: கடந்த 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.   21/4 தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன்  நேரடி தொடர்புள்ள பிரதான சந்தேக நபர்கள் உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் 90 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

  • கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று, தீர்வு வழங்கத் திட்டம்

    – அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை: பொது மக்களுக்களின் முறைப்பாடுகளை ஒன்லைன் மூலம் பெற்று, அவற்றுக்கு விரைவாக தீர்வு வழங்குகின்ற ஒரு பொறிமுறையை கல்முனை மாநகர சபையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட

  • “சஹ்ரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்தவும்”- ரணில்

    கொழும்பு: மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.  ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். 

  • ஜனாதிபதித் தேர்தலில் சஜித், பாராளுமன்றத் தேர்தலில் ரணில்!

    ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கட்சியைத் துண்டாக்க நான் விரும்பவில்லை. கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எனது தந்தை உயிரையே அர்ப்பணித்துள்ளார். எனவே, கட்சிக்குத் துரோகமிழைக்க நான் விரும்பவில்லை.

  • “சேர்…. எமக்கு அந்த சோதனைகள் அவசியமில்லை…நாம் கர்ப்பம் தரித்துவிட்டோம்”

    சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பிரசவ மற்றும்  பெண்ணியல்  விவகார வைத்தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த இரு பெண்கள்  தற்போது கர்ப்பம் தரித்துள்ளனர்.   தாம் வைத்தியர் ஷாபி ஊடாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறு சிசேரியல் செய்யப்பட்டு அடுத்த குழந்தையைப் பெற கடந்த இரு வருடங்களாக முயன்றும் குழந்தை கிடைக்கவில்லை எனவும் அதனால் தாம் வைத்தியரால் கருத்தடை செய்யப்ப்ட்டுள்ளோமா என சந்தேகம் எழுவதாகவும் அந்த  இரு தாய்மாரும் முறைப்பாடளித்துள்ளனர்.…

←Previous Page
1 … 62 63 64 65 66 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar