இந்த வருட நகைச்சுவை** “முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறங்குவது சிறப்பு” – நஸீர் அஹமட்

எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என்­பதை உறுதி செய்­யப்­போ­கின்­றது.  எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்­த­கை­யது என்­பதை வெளிக்­காட்டும் விதத்தில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்தி அவ­ருக்கு ஒட்­டு­மொத்­த­மாக தமது முத­லா­வது வாக்கை அளிக்­க­வேண்டும்.

இரண்­டா­வது வாக்கை முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை ஏற்று அதற்கு உத்­த­ர­வாதம் அளிக்கும் வகையில் செயற்­ப­டக்­கூ­டிய பிர­தான வேட்­பா­ள­ருக்கு வழங்­க­வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்­கையே சம­கால அர­சியல் போக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு சிறந்த பெறு­பேற்­றைத்­தரும் என கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

Published by

Leave a comment