-
81 வயது முதியவராக வேடமிட்டு அமேரிக்கா செல்ல முயன்ற 32 வயது இளைஞர் கைது!
டெல்லி: போலி பாஸ்போட் வைத்துக்கொண்டு, 81 வயது முதியவராக மேக்அப் போட்டு, நியூயார்க் செல்ல இருந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான ஜெயேஷ் படேல் என்பவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
-
அம்பாறை மாவட்டத்தில் திடிரென வீசிய பலத்த காற்று
– பாறூக் சிஹான் அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் திடிரென வீசிய பலத்த காற்று காரணமாக வீதியோர கடைகள் சேதமடைந்தததுடன் போக்குவரத்தும் சிறிது தடைப்பட்டது. வியாழக்கிழமை(12) மதியம் முதல் மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு ஏறத்தாழ 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் தொடர்ந்து பெய்தது.
-
தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் தந்தை புலி உறுப்பினர்: அவரது உடல் காத்தான்குடியிலேதான் அடக்கப்பட்டது
மட்டக்களப்பு நகர் சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் என்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே காரணமாகும்.
-
ரணில் – சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெற புதிய வியூகம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி-01, சாவியா பாடசாலை வீதியைச் சேர்ந்த, காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், காத்தான்குடி கோட்டக் கல்வி முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ். SMM. சுபைர் சேர் (வயது 64) அவர்கள் சற்றுமுன் வபாத்தானார்கள்.
-
“மந்திரக் கை” பந்து வீச்சாளர் அப்துல் காதிர் காலமானார்
லாகூர்: முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. உலகின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னராக வலம் வந்தவர் அப்துல் காதிர். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனக்கென தனி பாணியில் சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய ஜாம்பவான்.
-
தொடர்ச்சியான 4 விக்கெட்டுக்களுடன் 100 விக்கெட்டுக்களை தாண்டிய மலிங்க
நிஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்க 100 விக்கெட்டுக்களை எடுத்து சாதனை படைத்தது மாத்திரமல்லாது ஹெட்ரிக் சாதனையையும், தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்களையும் சாய்த்து தள்ளியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 125 ஓட்டங்களை குவித்தது.
-
இலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா?
பௌத்தர்களை தவிர்த்த ஏனைய தரப்பினருக்கு இலங்கை அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியாக முடியாது என சமூகத்தில் கருத்தொன்று நிலவுகிறது. பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக முடியாது என்ற கருத்து சமூகத்தில் அதிக அளவில் பேசப்படுகிற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் போட்டியிட்ட வரலாறும் இருக்கிறது.
-
“பொலிசாரின் கடமைகளை மாநாட்டிற்கு வந்த போரா சமூகத்தினர் செய்ய கூடாது”
போரா சமூகத்தினரின் சர்வதேச மாநாட்டிற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி அவற்றை முறைமைப்படுத்த வேண்டியவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களே தவிர, மாநாட்டிற்காக இங்கு வந்திருக்கும் போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து, அவற்றுக்கமைவாகச் செயற்பட வேண்டும். உண்மையில் அவ்வாறு செயற்படுவதற்கு அவர்கள் தயாராக இருக்கும் நிலையிலும் கூட, அரசாங்கம் அதற்கு அவசியமான உத்தரவுகளையும் வேண்டுகோள்களையும் பிறப்பிக்கவில்லை என்று அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
-
74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி
74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற வயோதிப பெண் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திராவில் குண்டூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எர்ராமட்டி மங்கம்மா (வயது 74) அவரின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் (வயது 80). இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லத காரணத்தால் சமூகத்தில் பெரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால்…
-
“ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்”- மோடி
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். பண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அங்கு நிரந்தர வசிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
கடந்த 3 வருடங்களில் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் 97 அறிக்கைகள்
கொழும்பு: 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள் அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தார்.