WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “வடக்கிலும் கிழக்கிலும் பௌத்தம் புறக்கணிக்கப்படுகிறது”- ஞானசார

    இந்து- பெளத்த மோதலை உரு­வாக்க நாம் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. ஆனால் நாட்டில் அனைத்து பகு­தி­க­ளுக்கும் செயற்­படும் சட்­டத்தை  வடக்கு கிழக்கில் மாத்­திரம் தட்­டிக்­க­ழிக்க முயற்­சிப்­பதே முரண்­பா­டாக உள்­ள­தென   பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர்  தெரி­வித்தார். நீதி­மன்ற தீர்ப்பு தாம­த­மா­கவே  தேரரின் பூதவுடலை தகனம் செய்தோம் எனவும்  அவர் குறிப்­பிட்டார்.

  • வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம்

    முல்லைத்தீவு: பௌத்த மதகுருவின் உடலம் எரிப்பது தொடர்பில் நீதிமன்றில் நடைபெற்ற  வழக்கின்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன்,நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்து  இன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

  • கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 03 மணித்தியாலத்திற்கு முன்னராக வருகை தரவும்

    கொழும்பு: தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 03 மணித்தியாலத்திற்கு முன்னராக வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பயணிக்களுக்கு, கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகத்தினர் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

  • முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்

    முல்லைத்தீவு:: நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. 

  • “தன்னுடைய முழுமையான வெற்றியின் ஒரு பாகமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்”-கோதா

    புத்தளம்: மக்கள் மத்தியில் சிலரால் முன்னெடுக்கப்படும் பொய் பிரசாரங்களும், என்னைப் பற்றிய தவறான கருத்துக்களும் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ, முஸ்லிம் மக்கள் அவ்வாறான அச்சத்திலிருந்து மீண்டு தன்னுடைய முழுமையான வெற்றியின் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

  • பௌத்த பிக்குவின் உடலை இந்து ஆலயத்திற்கு அருகில் தகனம் செய்வது இந்து மதத்தை அவமதிக்கும் செயல்

    முல்லைத்தீவு: புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை விதித்து கட்டளையிட்டது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில்…

  • ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை ஆதரிக்க ந.தே.மு (NFGG) தீர்மானம்

    – ந.தே.மு ஊடகப் பிரிவு எதிர்வரும் நவம்பர் 16 இல் நடைபெற திகதி குறிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான  அனுர குமார திஸாநாயக்கவை ஆதரிப்பது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது. கட்சியின் உள்ளக மட்டங்களிலும் சமூக மட்டத்திலும்  பல சுற்றுக் கலந்துரையாடல்கள் மூலம் தொடர்ச்சியாகவும்  விரிவாகவும் ஆராய்ந்ததன் பின்புலத்திலேயே இந்தத் தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

  • தொடர்மாடி தொடர்பால் 4மாத கர்ப்பமான பாடசாலை மாணவி-கல்முனையில் சம்பவம்

    – பாறுக் ஷிஹான் தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் பெரியநீலாவணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணையில் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான சித்தப்பா ஞாயிற்றுக்கிழமை(22)கைது செய்யப்பட்டார்.

  • ஐ.தே.மு வேட்பாளராக சஜித்

    ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய நீண்டநாள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. கட்சித்தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்று முன்தினமிரவு (20) நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன.

  • மக்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்: சிராணி

    கொழும்பு: மக்கள் விரும்பினால்   தேர்தலில் போட்டியிடுவேன் என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

  • முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில் இல்லை

    கொழும்பு: அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எச்.ஏ.ஹலீம் வெளியிட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

  • மீண்டும் வெள்ளை வேன்: கடத்தப்பட்டவர் கொட்டாவையில் விடுவிப்பு

    கொழும்பு: ஊருபொக்கை பகுதியில் நேற்று கடத்தப்பட்ட கூட்டுறவுப் பணிப்பாளர் கொட்டாவையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் பேச்சாரள் தெரிவித்தார்.இதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இலக்கத் தகடற்ற வெள்ளைநிற வேன் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சந்தேகத்தில் 3 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

←Previous Page
1 … 57 58 59 60 61 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar