WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஈராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்: 70 பேர் பலி

    பக்தாத்: ஈராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் மேலும் வலிமையானதால், இந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்தது.

  • கேக் வெட்டி கொண்டாடிய பொதுஜன பெரமுன

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட இன்று மாலை தீர்ப்பறிவித்திருந்தார்.

  • கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம்

    கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனை பிபிசி தமிழுக்கு உறுதி செய்தார். இதனால், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.

  • சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 251 ரூபாவினால் குறைவு

    12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 251 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

  • மீண்டும் இலங்கையில் தாக்குதல் இடம்பெறலாம்

    கொழும்பு: இலங்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள கடிதம்  குறித்து காவல்துறையினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை விடுக்கும் கடிதமொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் பல ஹோட்டல்கள் தாக்கப்படலாம் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது.

  • கல்முனை மாநகர சபையில் உணவுக் கட்டுப்பாடு அதிகார சபை ஸ்தாபிப்பு

    – அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை: கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு வகைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு உணவுக் கட்டுப்பாடு அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற சுகாதாரத்துறை விசேட கூட்டத்தின்போது இவ்வதிகார சபையின் அவசியம் குறித்தும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

  • யாழ் சர்வதேச விமானநிலையமாகிறது பலாலி

    யாழ்ப்பாணம்: பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று  பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 

  • சோதனை சாவடிகளில் சோதனைகள் தளர்வு

    – பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் அமைக்கப்பட்ட  புதிய நிரந்திர சோதனை சாவடியில் சோதனை  நடவடிக்கை ஊடகங்களில் வெளிவந்த செய்தியினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை( 30)  மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும்  அதிகமான  இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  • லண்டன் எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை பொறுப்பேற்ற சங்கா

    லண்டன்: லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார் சங்கக்கார, மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • 350 சவூதி படையினர் ஹௌதி இஸ்லாமிய போராளிகளினால் விடுவிப்பு

    – முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது   கடந்த இருதினங்களுக்குள் சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாகாணத்தின் யேமனை அண்டிய பிரதேசத்தில் ஹௌதி இஸ்லாமிய போராளிகளின் தாக்குதளின்போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சவூதி  படையினர்களில் 350 பேர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.   ஹௌதி இயக்கத்தினரின் இந்த நடவடிக்கையானது அதிஉயர்ந்தபட்ச மனிதாபிமானமான செயலாக பார்க்கப்படுவதுடன், இது சிறந்த அரசியல் ராஜதந்திரம் என்றும் நோக்கப்படுகின்றது.  

  • இராணுவம் தேடுதல்-புதிய சோதனை சாவடிகள்

    – பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. திங்கட்கிழமை (30) மதியம்  மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும்  அதிகமான  இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை…

  • கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்

    கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.  ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு தெரிவித்து, கொலன்னாவ பகுதியில் நேற்று (29.09.2019) நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

←Previous Page
1 … 55 56 57 58 59 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar