WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலகின் வறுமையான நாடுகளின் பட்டியலில் இலங்கை

    உலகின் வறுமையான நாடுகளின் பட்டியல் போகஸ் எக­னொமிக்ஸ் (Focus Economics) என்ற பொரு­ளா­தார ஆய்வு நிறு­வ­னத்தின் அறிக்­கைக்கு அமைய  வெளி­யிடப்பட்­டுள்­ளது. 126 நாடு­களின் மொத்த தேசிய உற்­பத்­தியை ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி இந்த ஆய்­வ­றிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

  • சஜித்தின் கூட்டம் காலி முகத்திடலில் ஆரம்பம்

    கொழும்பு: புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுவதோடு, அதில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • பாகிஸ்தான்பாதுகாப்புப்படையினரை கௌரவித்த இலங்கை அணி

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் 10 பேர் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தானுடனான தொடரினை புறக்கணித்த நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு கடந்த 24 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்கில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்திய இலங்கை அணியானது ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் பறிகொடுத்தபோதிலும், இருபதுக்கு – 20 தொடரை 3:0…

  • பாகிஸ்தானுக்கு “தண்ணி” காட்டிய இலங்கை இளம் அணி!

    லாகூர்: பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு – 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது.

  • ஜனாதிபதி தேர்தல் 2019: அறியவேண்டிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

    ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது. இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)

  • சிரியாவில் ஐ. எஸ் இயக்கத்தை விரட்டியவர்களை கைவிட்ட அமெரிக்காவும், துருக்கியின் இராணுவ நடவடிக்கையும்

    – முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது வடக்கு சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தினரை அழிப்பதற்கு அமெரிக்காவால் கட்டியமைக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள போகின்றது என்பது தெரிந்தவுடன் அவர்களை கைவிட்டுவிட்டு அமெரிக்கப் படைகள் வடக்கு சிரியாவைவிட்டு வெளியேறுகின்றனர்.  அமெரிக்கப்படைகள் முழுமையாக வெளியேற முன்பே துருக்கி படையினர்கள் குர்திஷ் போராளிகளின் நிலைகள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்கள்.

  • அநுராதபுரத்தில் 6,000 தபால் வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

    அநுராதபுர  மாவட்டத்தில்  தபால் மூல வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்த  விண்ணப்பங்களில்  6000  விண்ணப்பப்படிவங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக  அநுராதபுரம்  மாவட்ட   அரசாங்க  அதிபர்  ஆர்.எம்.வன்னினாயக்க  தெரிவித்தார். இம்முறை  ஜனாதிபதித்  தேர்தலின்  போது  தேர்தல்  கடமைகளில்  ஈடுபடுவதற்காக  எதிர்பார்க்கும்  தபால்  மூல  வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்துள்ள  ஐம்பத்து மூவாயிரம்  (53000) விண்ணப்பப்படிவங்களிலேயே  ஆறாயிரம்  விண்ணப்பப்படிவங்கள்  சில   குறைபாடுகள் காரணமாக  நிராகரிக்கப்பட்டுள்ளது  என  அரசாங்க  அதிபர்  மேலும்  தெரிவித்தார். 

  • பிள்ளையை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை

    திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த என் ஜோஹான் ஜோசப் (27 வயது) எனவும் தெரியவருகின்றது. 

  • ஹிஸபுல்லாஹ்விற்கு எதி­ராக ஆட்­சே­பனை மனு

    கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்  தாக்கல் செய்­துள்ள  வேட்பு மனு­விற்கு எதி­ராக ஆட்­சே­பனை மனு­வினைத் தாக்கல் செய்தேன். கடந்த கால நில­வ­ரங்­களை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் ஜனா­தி­ப­தியை தெரிவுசெய்ய வேண்டும் என  ஜன­சத பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பத்­த­ர­முல்ல சீல­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

  • முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

    கொழும்பு: தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி பயங்கரவாதம் இல்லாத  சூழலை ஏற்படுத்தி  பொருளாதா ரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை முன்னெடுத்தேன்.  முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என  முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

  • பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

    லாகூர்: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்றரவு (7) 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.

  • கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்கள் விபரம்

    எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று நண்பகல் 12 மணிவரை 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 19 பெரும் சுயேச்சைகளாக 22 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.   கட்டுப்பணம் செலுத்தியவர்கள் விபரம் வருமாறு:   கட்சிகள் சார்பில்  

←Previous Page
1 … 54 55 56 57 58 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar