கொழும்பு: புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் இக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுவதோடு, அதில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.