WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களை புகைப்படங்களுடன் அம்பலப்படுத்துவேன்: ஹக்கீம்

    சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் சூளுரைத்துள்ளார். பாராளுமன்றில் சிறப்புரிமைக்கேள்வியொழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  • புத்தளத்தில் உஸ்தாத் மன்ஸூர் எழுதிய நூல் அறிமுக விழா

    அனீன் மஹ்மூத் ஜாமிஆ நளீமியாவின் முன்நாள் விரிவுரையளாரும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம் மற்றும் அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி என்பவற்றின் ஸ்தாபகருமான உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் எழுதிய “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?” எனும் நூல் பற்றிய மற்றுமொரு அறிமுக விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20/10/2019) புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

  • “கோத்தாவை கைது செய்வதற்கு சட்டமாதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை நீதியமைச்சர் பதவியில் இருந்து தடுத்தேன்”

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை தான் நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  • எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள்: குளியாப்பிடியவில் மஹிந்த

    குளியாப்பிடிய: அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குளியாப்பிடிய நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி  மக்களை  அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம்  புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய…

  • அமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை குப்பைதொட்டியில் வீசிய துருக்கி ஜனாதிபதி

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அனுப்பிய கடிதத்தை துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் குப்பை தொட்டியில் வீசியெறிந்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.ஒன்பதாம் திகதி துருக்கி ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

  • தெற்கில் படுதோல்வியடைவார் சஜித் – மஹிந்த

    ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதியிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹொரணையில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  • யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்: கோட்டாபய

    கொழும்பு: இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு

    கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • விசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

    பாறுக் ஷிஹான் மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

  • இது ஓர் உயிர் அச்சுறுத்தல்மிக்க புனிதப் போர்; நான் எந்நேரத்திலும் கொல்லப்படலாம்: காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்

    – நமது நிருபர் காத்தான்குடி: ஜனாதிபதி வேட்பாளராக ஒட்டகச்சின்னத்தில் போட்டியிடும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (11) சற்று முன்னர் இடம்பெற்றிருந்தது. மக்கள் எதிர்பார்த்து வந்ததைவிட, வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் உரை தனித்திருந்தது ஓர் விசேட அம்சமாகும்.

  • சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு

    முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன்.

  • கோத்தாபயவின் வாக்குகளை சிதைக்கவே 35 பேர் போட்டி : மஹிந்த

    குருணாகல்: நாட்டிற்கான எதிர்கால கொள்ளைகைககளை வெளியிடுவதற்கு பதிலாக  பொதுஜன பெரமுனவை விமர்சிப்பதே ஐ.தே.க கூட்டங்களின் பிரதான காரணமாகியுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதைப்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளர்கள் 35 பேர் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

←Previous Page
1 … 53 54 55 56 57 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar