WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • துப்பாக்கிச்சூடு, மழையை மீறி வாக்களிக்கும் மக்கள்

    மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பேருந்தில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • வாக்களிக்க கையடக்கத்தொலைபேசிகளை எடுத்துச்செல்ல வேண்டாம் ! 

    வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் உட்பட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பாதுகாப்பு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2019) காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாகவும், அனைத்து இடங்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

  • காடையர் கூட்டம் இடைஞ்சல்

    புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்காக தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் புத்தளம், கல்பிட்டி மக்களுக்கு இடையூறாக ஒயாமடுவ பகுதியில் காட்டுமரங்களை வெட்டி வீதித்தடையை ஏற்படுத்தியுள்ளனர். 120 பஸ்கள் புத்தளம் இருந்து மன்னாருக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைவரும் பாதுகாப்பாக செல்லும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்காமல்நாங்கள் விரும்புகினற வேட்பாளரை தெரிவு செய்யலாமா ?

    முகம்மத் இக்பால் சாய்ந்தமருது  நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்களிப்பதற்கு மக்கள் தயாராக உள்ள நிலையில் ஏற்கனவே பலதரப்பில் இருந்தும் கருத்துக்க கணிப்புகள் வெளிவந்ததுள்ளன. வாக்களிக்கின்ற மக்களின் மனோநிலையானது இறுதி நேரத்தில் மாற்றமடைய வாய்ப்புகள் இருக்கின்றது. இது அனைத்து கருத்துக் கணிப்புக்களையும் தவிடுபொடியாக்கிவிடும்.

  • தேர்தல் கடமை உத்தியோகத்தர்கள் 50 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு

    தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேரே உணவு ஒவ்வாமையால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

  • தேர்தல் கட­மை­களில் 2 இலட்சம் அரச ஊழி­யர்கள்: 60ஆயிரம் பொலிஸார், 3500அதி­ரடிப் படையினர்

    இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலின் வாக்குப் பதி­வுகள் நாளை இடம்­பெ­ற­வுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழி­யர்கள் தேர்தல் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் இவர்கள் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவ்­வ­தி­காரி குறிப்­பிட்டார்.

  • தேர்தல் களம்

    AK-48 காத்தான்குடி: வேடிக்கையும் விநோதமும் நிறைந்த காத்தான்குடி தேர்தல் மேடைகள் உட்பட அகில இலங்கையிலும் தேர்தல் மேடைகள் ஓய்வெடுக்கின்றன. காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் தரப்பும், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கூட்டணியுமே இம்முறை இரு துருவங்களாகச்செயற்பட்டடிருந்தன.

  • வெற்றி சாத்தியம்- புள்ளிவிபரம்சஜித் வெற்றிபெறுகிறார் இன்ஷாஅல்லாஹ்

    – வை எல் எஸ் ஹமீட் தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திரமே! யார் வெற்றிபெறுவார்? என்பது அவன் கையிலேயே இருக்கிறது. அதை அவனே அறிவான். நாம் மனிதன் என்ற முறையில் களநிலவரம், சூழ்நிலை என்பவற்றை கவனத்திற்கொண்டு சில அநுமானங்களைச் செய்யலாம். அந்தவகையில் இத்தேர்தல் வெற்றி சாத்தியம் யாரை நோக்கி இருக்கின்றது? என்பதை வெறும் பகுத்தறிவு ரீதியில் ஆராய்வோம்.

  • சஹ்ரானுக்கு எதிரானவர்களே காத்தான்குடியில் அதிகமாக இருந்தனர்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க 

    நான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய போது மொஹம்மட் சஹ்ரானை அறிந்திருந்தேன். அப்போது அவர் ஒரு மத போதகராக அல்லது விமர்சகராகவே கருதப்பட்டார். எனினும் அப்போதும் கூட காத்தான்குடி பகுதியில் உள்ள அனைத்து சாதாரண முஸ்லிம்களும் சஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்தனர் என குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும், 21/4 தககுதல்கள் இடம்பெறும் போது கொழும்பு மத்திய பொலிஸ் வலயத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராகவும் இருந்த உபாலி ஜயசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில்…

  • குண்டுத்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான திட்டம்

    பொதுஜன பெரமுனவினால் குண்டுத்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்மாதிபருக்கும் முறைப்பாட்டுக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். இது குறித்து நேற்று எரான் விக்கிரமரத்ன அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

  • பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன்: சஜித்

    தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும் கூறினார்.

  • ஹிஸ்புல்லாஹ்வுக்கு முதலாவது வாக்கை வழங்கி இரண்டாவது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குக

    ஆர்.எஸ்.மஹி கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமூகத்தின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு – ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பிலும் பேச்சு நடத்திய போதிலும் அவர்கள் தமது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், முஸ்லிம் சமூகம் தமது இரண்டாவது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குமாறு – தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் மையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா நேற்று புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

←Previous Page
1 … 50 51 52 53 54 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar