Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வீதிகள் செப்பனிடும் பணிகளைத் துரிதப்படுத்துக: ஹிஸ்புல்லாஹ்

    நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக காத்தான்குடி டீன் வீதி, மத்திய வீதி மற்றும் முகைதீன் பள்ளிவாசல் வீதி ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடுமாறும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம் 

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏனைய கட்சிகளில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை, பொதுத்தேர்தலுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் 

    மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும் பதவியேற்றார். 1. மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர்

  • பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்தார் மஹிந்த

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவருக்கான நியமனக் கடிதத்தினையும் வழங்கி வைத்துள்ளார்.

  • “தேசிய தலைவர் பிர­பா­கரன் மட்­டுமே”: கருணா

    இறுதி யுத்­தத்தில் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கூறு­கின்­றார்கள். நீங்கள் மட்டும் சென்று உறு­தி­ப்ப­டுத்தி கூறினால் மட்­டுமே நான் நம்­புவேன் என அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ என்­னிடம் கூறினார். நான் அவ்­வாறு நடந்­தி­ருக்­கக்­கூ­டாது என நினைத்து களத்­துக்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன் அவர் தான். ஆனால் அத­னைக்­கூட எங்­க­ளு­டை­ய­வர்கள் உரிமை கோரு­கின்­றார்கள் இல்­லையே.

  • சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் 

    ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பதற்கு சஜித் பிரேமதாச மிகப் பொறுத்தமானவராவார். அவரின் தலைமைத்துவத்தை விரும்பி வாக்களித்த 55 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகவே இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க இதனை புரிந்து கொள்வார் என்று நம்புவதோடு, அவரது ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

  • பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார் ரணில்

    ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும், இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளார். புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று புதன்­கி­ழமை பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்துள்ளார்.

  • கிழக்கைஅபிவிருத்தி செய்ய வியாழேந்திரன் அமைச்சர்?

    ராஜபக்ஷ குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என நம்புவதாக முற்போக்கு தமிழர் அமைப்பின் அம்பாறை, கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் பொறுப்பாளரும் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவருமாகிய கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

  • தனிச்சிங்கள தலைவர் ஒருவர் நாட்டுக்கு கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பிற்கான தேவை இனி இல்லை: ஞானசார

    ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.அ த்தோடு கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றுள்ளதால் தமது அமைப்பிற்கான தேவை இனிமேல் இல்லை என்றும் இதனால் பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

  • 33 ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்திற்கு நடந்ததென்ன ?

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளை பெறத்தவறிய வேட்பாளர்களின் கட்டுப்பணமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

  • பாரூக் நானா

    1985ம் ஆண்டு காத்தான்குடியின் முன்னணி கழகமான யுனைடட் விளையாட்டுக்கழகத்திற்கும் அக்கரைப்பற்று யூத் விளையாட்டுக்கழகத்திற்குமிடையில் சிநேகபூர்வ உதைப்பந்தாட்டப்போட்டி சனத்திரளால் நிறைந்திருந்த காத்தன்குடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாலை வேளையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

  • உத்தியோகபூர்வ அழைப்புக்கமையவே ஜனாதிபதிபதவியேற்பு நிகழ்வில் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!

    ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (18) உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார் – என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 48 49 50 51 52 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar