WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல்

    பா.திருஞானம் இன்று (18) இலங்கை சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

  • ஜனாஸா நல்லடக்க விபரம்

    இன்று (18) மாரடைப்பால் மரணமான இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும், இலங்கை உதைப்பந்தாட்ட நடுவர் சங்க உறுப்பினரும் காத்தான்குடி லீக் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான என்.ரி.பாறூக் அவர்களின் ஜனாஸா அக்கரைப்பற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 06.00 மணிக்கு அக்கரைப்பற்று மர்கஷ் பள்ளிவாயளில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்,

  • “மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்”

    மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

  • “ர‌வூப் ஹ‌க்கீம் ஒரு முட்டாள்”- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

    2001ம் ஆண்டு முதல் நான் சொல்லி வ‌ருகிறேன் ர‌வூப் ஹ‌க்கீம் ஒரு முட்டாள் என்றும் வேண்டும் என்றே முஸ்லிம் ச‌மூக‌த்தை ஏமாற்றுகிறார் என்றும். என் க‌ருத்தை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டாலும் அவ‌ர்க‌ளால் ஜீர‌ணிக்க‌ முடிய‌வில்லை. இந்த‌ தேர்த‌லில் ஹ‌க்கீம் ஆத‌ரித்த‌ அணி ப‌டு தோல்விய‌டைந்த‌த‌ன் பின்னாவ‌து முஸ்லிம் ச‌மூக‌ம் சிந்திக்குமா? முஸ்லிம் ச‌முக‌த்தை பெரும்பான்மை முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ திருப்பி விட்ட‌ நாச‌காரி ஹ‌க்கீம், த‌ன்னை ம‌ட்டும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌ம் ந‌ல்ல‌வ‌ராக‌ காட்டிக்கொள்வார்.

  • ஐக்­கிய தேசிய கட்­சியின் பல எம்.பி.க்களுடன் “விலைப்பேச்சுவார்த்தை”

    நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்­றி­பெற்­றுள்ள நிலையில் 113 ஐ பெறும் தரப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் ஆட்சி அமைப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர். அதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் 113 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சியில் மஹிந்த தரப்பு ஈடு­பட்­டுள்­ளது. அதன்­படி நேற்­றைய தினமும் நேற்று முன்­தினம் மாலையும் ஐக்­கிய தேசிய கட்­சியின் பல எம்.பி.க்களுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

  • பாரூக் நானா காலமானார்

    அகில இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும் சன்றைஸ் விளையாட்டுக்கழக மூத்த வீரருமான சகோதரர் NT Farook அவர்கள் மாரடைப்பு காரனமாக வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  • மகிந்தவின் பிறந்தநாளில் பதவியேற்கிறார் கோட்டபாய

    இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை (திங்கட்கிழமை) அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இ லங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • கோத்தாவின் வெற்றியும், ஏற்பட்டுள்ள அச்சமும் எதனை காட்டுகின்றது ?  

    சிறுபான்மையினரின் ஆதரவின்றி சிங்கள மக்களினால் வெற்றிபெற முடியும் என்பதனை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.  ஒரு வரியில் கூறப்போனால் இந்த தேர்தல் முடிவானது சிங்கள பேரினவாதம் வெற்றியடைந்துள்ளது என்பதனை காட்டுகின்றது.

  • ஐ.தே.க வின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் விலகல்

    நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறை நடத்த உதவியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

  • இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்

    இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

  • தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் 

    371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இறுதி செய்யமுடியாதுள்ளமையாலும் நேரகாலத்திற்கு தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  • முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு

    ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து தற்போது புத்தளத்தில் வசித்து வருகின்றனர்.

←Previous Page
1 … 49 50 51 52 53 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar