-
காத்தான்குடி நகரசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்
டிசம்பர் பாடசாலை விடுமுறை, டெங்கு பரவல் மற்றும் எமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையினையும் கருத்திற்கொண்டு இன்று 06/12/2019 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் 03/01/2020 வரை சகல தனியார் வகுப்புக்கள், தனியார் மதரசாக்கள், சிறுவர் குர்ஆன் மதரசாக்கள், பாலர் பாடசாலைகள் போன்றவற்றை முழுவதுமாக மூடி விடுமுறை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு – மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி- 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று 05 வியாழக்கிழமை பிற்பகல் மதியம் சுமார் 2.00 மணியிலிருந்து கால வரையரையின்றி காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,நகர சபை உறுப்பினர்கள்,அதிகாரிகள் ஆகியோரினால் முற்று முழுதாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன் ,மறு அறிவித்தல் வரை மூடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.க. வின் தலைமைத்துவ பொறுப்புக்களில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இன்று (05.12.2019) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்ற குழுவும் இணைந்தே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
-
கல்முனையில் தனியார் கல்வி நிலையங்களை டிசம்பர் 15-31 வரை மூடுவதற்கு தீர்மானம்
அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தரம்-11 வரையான மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடாத்தும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் டிசம்பர் 15 தொடக்கம் 31 ஆம் திகதி வரை மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
புலனாய்வுத்துறையின் வீழ்ச்சியே இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கான காரணம்
தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள், இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உதவியளிக்க வேண்டும்: ஜனாதிபதி கோட்டா
பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
-
ஈஸ்டர் தாக்குதல்: முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்
தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
-
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதது ஏன்?
இலங்கை முஸ்லிம்களை பேசுபொருளாக்கிக் கொண்டே பௌத்த பேரினவாதிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை பெற்றுக் கொள்ளக் கூடியதொரு சூழல் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.
-
பிரதி அமைச்சர்களாக பதவியேற்ற மூவர் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் பிரதியமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
-
மோடியின் அழைப்பு: ஜனாதிபதி இந்தியா பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
-
பாடசாலை சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள்
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி, அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அளகப்பெரும இன்று (28) முற்பகல் ஹோமகம, பிட்டிபன, மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.