-
இலங்கை நாடாளுமன்றத்தின் இறுதி நாள்: 66 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது
நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற இறுதி நாள் அமர்வுகள் இன்று இடம்பெற்றன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற இறுதி நாள் அமர்வுகள் இன்றைய தினம் இடம்பெறுவதை சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
அமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் தீர்மானம் !!
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப் படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அவ்வாறு மீள் நிர்ணயம் செய்யப்படவேண்டிய உள்ளூராட்சி கட்டமைப்புக்களை ஒரேயடியாக செய்யும் வரை மேற்படி இடைநிறுத்தம் அமுலுக்கு வருகிறது! 2018 ஆம் ஆண்டு மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சராக இருந்த அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை பரிசீலனைக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. என அமைச்சரவைப்…
-
கொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? உண்மை என்ன?
டெல்லி: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று வெளியாகும் செய்திக்கு இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் விளக்கம் அளித்துள்ளார். கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும்.
-
சாய்ந்தமருது நகரசபை: பிரசுரமானது வர்த்தமானி அறிவித்தல்
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது நகரசபை 2022, மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியானது.
-
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு அடுத்ததாக சிங்கப்பூர் பயப்படுவது ஏன்?
கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.
-
ஸஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 61 பேருக்கு மறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு 21/4 தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத்ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஸஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதே சிறந்தது
லண்டன்: பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 198வது கொடியேற்ற நிறைவு விழா
– எம்.என் .எம்.அப்ராஸ் கல்முனை: கல்முனை மாநகர மக்களால் வருடா வருடம் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழாவின் கொடி இறக்கும் நிறைவு தினம் கடற்கரை பள்ளிவாசலில் இன்று(06) பிற்பகல் இடம்பெற்றது. கொடியிறக்கும் தினமான (06)இன்று வியாழனன்று மாபெரும் கந்தூரி அன்னதானம் ,வழங்கிவைக்கப்பட்டதன் பின்னர் விஷேட துஆ பிராத்தனையுடன் கொடி இறக்கப்பட்டது .
-
ஜப்பான் துறைமுகத்தில் 3700 பயணிகளோடு நிற்கும் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்
ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
-
ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு
கொழும்பு நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடலுக்கு அருகில் இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ்விடம் தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதி இதற்கு முன்னார் ஜனாதிபதி செயலக வாகன தரிப்பிடப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
-
லண்டனில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை!
லண்டன்: லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த “பயங்கரவாதம் தொடர்பான” சம்பவத்தில் ஒரு நபர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுடப்பட்டதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள ஸ்ட்ரதம் ஹை ரோட் எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர், ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலாளியால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
-
தலைவரும் பிரதமர் வேட்பாளரும் சஜித் பிரேமதாஸவே
கொழும்பு: ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.