-
பரவிவரும் போலி தகவல்கள்
கொழும்பு: இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையரின் மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
-
கொரோனா தொற்று: இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை
கொழும்பு: இலங்கைக்குள் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார். சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
-
கல்முனை மாநகர எல்லைக்குள் ஏப்ரல் 20ஆம் திகதி வரை டியூசனுக்கும் தடை;மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை
– அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மூடப்படும் காலப்பகுதியில் கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
-
கொரோனா வைரஸின் ஆரம்பம் எப்போது??
வுகான் மருத்துவமனைகளில் தனது சகாக்கள் பலர் உயிரிழப்பதை பார்த்ததாக தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப எச்சரிக்கைகளை சீன அதிகாரிகள் மறைத்தனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். சீன சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் வுகான் மத்திய மருத்துவமனையின் இயக்குநர் அய்பென் இதனை தெரிவித்துள்ளார்.
-
ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம்
ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் எனஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ் பரவுவம் வேகத்தை குறைப்பது குறித்தே கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம்
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா வழிகாட்டியான இவர் இத்தாலி்சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையில் நடமாடியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
NTJயிற்கு நிதியுதவியளித்த பிரதான 7 நபர்களைத் தேடும் சி.ஐ.டி
கொழும்பு: உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சுத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுக்கும் அவரது என்.டி.ஜே. எனப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் நிதியுதவி அளித்து வந்த முக்கிய நபர்கள் 7 பேரைத் தேடி சி.ஐ.டி. விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
-
இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு மரணம்
காத்தான்குடி-03, கடற்கரை வீதியில் ஹபீப் றகுமான் (வயது 32) எனும் 02 பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு!
-
நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் பணியாளர் இனவாதிகளால் வெட்டி கொலை
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று சற்றுமுன்னர் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஹோட்டல் உரிமையாளர் உட்பட மேலும் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
9 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ரமழான் முஹம்மது இம்ரான் மற்றும் அசனார் முஹம்மது அஸ்மி ஆகியோரின் தலைமையிலான 2 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இது வரை 9 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கடந்த புதன்கிழமை (04) முதல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை ஆரம்பமானதோடு, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி 12 மணியுடன் அது நிறைவடைகின்றது.
-
சரணடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் மரணித்துவிட்டனர்: ஜனாதிபதி
கொழும்பு: இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தை மறந்து அனைவரும் தம்முடன் இணைந்து பயணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் அனைவரும் மரணித்துவிட்டதாகவும் மீண்டும் அடித்துக் கூறியுள்ள கோட்டாபய ராஜபக்ச, அதனால் அந்தப் பிரச்சனை தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
-
25 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிய இலங்கை
கண்டி: இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானைத்தில் ஆரம்பமானது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ஓட்டங்களை குவித்தது.