-
தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு
கொழும்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.க டந்த 2000ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் மிருசுவிலில் இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு, 13 ஆண்டு விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2015 ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
வீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடிகள் இணைந்து பிரதேச பொறிமுறையொன்றின் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், நெறிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட இந்திய பேராசிரியர் கூறுவது என்ன?
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 511-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால், அதில் நம்பிக்கை தரும் கதையாக அவுரங்காபாத்தில் பேராசிரியர் ஒருவர் மருத்துவ உதவியுடன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
-
யாழில்தனிமைப்படுத்தப்பட்டுள்ள380 குடும்பங்கள்
யாழ்ப்பாணத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மதபோதகர் நடமாடிய அரியாலை பகுதியில் 80 குடும்பங்களும், தாவடியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் வசித்த வீட்டினைச் சுற்றியுள்ள 300 குடும்பங்களும் இராணுவம் மற்றும் பொலிஸாருடைய பாதுகாப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
-
இலங்கையில் கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்
கொழும்பு: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான, முதலாவது இலங்கையர குணமடைந்துள்ளார். கடந்த மார்ச் 11ஆம் திகதி 52 வயதான பயண வழிகாட்டியான குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இரண்டாவது நபர் இவர் ஆவார்.
-
ஊரடங்குச்சட்ட மீறல்: 1,754 பேர் கைது
கொழும்பு: ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 1,754 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தியது முதல், இன்று (23) காலை 6.00 மணி வரை, குறித்த 1,754 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
-
மின்சார பட்டியலை செலுத்த மார்ச் 31 வரை சலுகை
மின்சாரப் பட்டியல் கட்டணம் மற்றும் நிலுவைகளை செலுத்துவதற்று மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமாக, இதனை அறிவிப்பதாக, மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
-
நாடு முழுவதும் ஊரடங்கை மீறிய 28 பேர் கைது: கைதுசெய்யப்பட்டோர் விபரங்கள்
ஊரடங்கு அமுலில் இருக்கின் வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 28 பேர் நேற்றும் இன்றும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையத்தின் மூலம், ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் என பொலிஸார் அறிவித்து வருவதோடு, ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
அமெரிக்காவின் எதிரி நாடுகளான சீனாவும், ஈரானும் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டதா ? ஈரானின் நிலைமை என்ன ?
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது நவீன மருத்துவத் துறைக்கு சவால் விடுத்துக்கொண்டு உலகையே ஆட்டம்காண வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசினால் சீனர்கள் மரணித்துக் கொண்டிருந்தபோது உலகிலிருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டது. செல்லும் இடமெல்லாம் சீனர்கள் துரத்தப்பட்டார்கள். சீனாவுக்கான விமானப்பயனங்களை உலக நாடுகள் நிறுத்தியது.
-
காத்தான்குடியில் ஜும்ஆ நடைபெறாத நாள் 11/12/1978
காத்தான்குடியில் ஜும்ஆ நடைபெறாத நாள். சூறாவளி மறுநாளாகும்.அக்காலை காத்தான்குடி தினகரன் நிருபராகநான். தினகரன்11/12/78.
-
கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி
கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.