-
கொரோனா நோயாளி ஒருவர் தும்மும் போது 27 அடி தூரம் வரை காற்றில் வைரஸ் பரவும்!
கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும் போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர்த் துளிகள் 27 அடி வரை வைரஸ் உடன் காற்றில் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. நேற்று வரையில் 9 இலட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 47 ஆயிரத்து 745 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தாக்கி ஒரு…
-
சீனாவில் கொரோனா சிகிச்சையில் கரடியின் பித்தநீர்
கொரோனா தொற்றால் உடல்நலம் மோசமாகியுள்ள நோயாளிகளுக்கு மருந்தாக கரடியின் பித்தநீரை பயன்படுத்த சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவின் தேசிய ஆணையம், கரடியின் பித்தநீர், ஆட்டின் கொம்பு மற்றும் மூலிகைகள் அடங்கிய ‘டாங்ரேகுவிங்’ ஊசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
மிகவும் கனத்த இதயத்துடன் இந்த செய்தியினை உங்கள் முன் பகிர்கிறேன்
நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு மருதானை பகுதியினை சேர்ந்த சகோதரர் ஜூனூஸ் (74) என்பவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) இல் சற்றுமுன் உயிரிழந்து விட்டதாகவும் , குறித்த ஜனாசாவை எரியூட்டாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வழங்குமாறும் குறித்த நபரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
-
இலங்கையில் மற்றுமொரு முஸ்லிம் சகோதரர் மரணம்
மருதானை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பீ.எச். எம் ஜுனுஸ் என்பவர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளார். நேற்று (1) ஐ டீ எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
-
“நமது புத்திஜீவிகள் ஆதரவு வழங்காவிடினும் பரவாயில்லை, பண்டித வேலை மாத்திரம் செய்திட வேண்டாம்”
அரசியலுக்கு அப்பால் இஸ்லாமியரின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டமையின் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பெரும்பான்மையினரால் சமூக வலைத்தளங்களில் பெருத்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். நமது புத்திஜீவிகள் அவருக்கு ஆதரவு வழங்காவிடினும் பரவாயில்லை, பண்டித வேலை மாத்திரம் செய்திட வேண்டாம். – Safaz Mansoor
-
ஐக்கிய இராச்சியத்தில் 24 மணித்தியாலங்களுள் 563 பேர் மரணம்
M ஜலீஸ் லண்டன்: கோவிட் 19 வைரஸ் தொற்றுக்காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுள் 563 பேர் மரணமடைந்திருக்கின்றனர். கோவிட் 19 வைரஸ் பரவத்தொடங்கிய காலப்பகுதியில் 24 மணித்தியாலங்களுள் மரணமடைந்தவர்களின் அதிகூடிய எண்ணிக்கையாக 563 காணப்படுகிறது.
-
நீர்கொழும்பு கொரோனா மரண தகனம் தொடர்பில் உலமா சபை
நேற்று முன்தினம் (30) நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின், பொதுச் செயலாளர், அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் இனால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-
இஸ்லாமியர்கள் எரியூட்டப்பட மாட்டார்கள் என்ற அரசியல் வாக்குறுதி எங்கே ? இஸ்லாம் என்ன கூறுகின்றது ?
முகம்மத் இக்பால் , சாய்ந்தமருது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மகா சுயநலவாதிகள் மற்றும் குழப்பவாதிகள் என்ற சிந்தனையை எமது மனதில் நிலை நிறுத்தினால் அரசியல்வாதிகளின் கருத்துக்களைக்கண்டு நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு கட்சியின் தலைவர்களிடம் ஒரு கொள்கை இருக்கும். அக்கட்சிகளின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் இன்னுமொரு கொள்கை இருக்கும். இவைகள் இரண்டும் சமாந்தரமாக செல்வதில் குழப்பங்கள் நிலைத்திருக்கும்.
-
மேலும் 7 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று (31) பிற்பகல் 3.20 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 122 இலிருந்து 129 ஆக அதிகரித்துள்ளது.
-
உயிரிழந்த 2ஆவது நபர் அடக்கம் செய்யப்பட்டார்
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் நல்லடக்கம் நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றது. நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொது மாயனத்தில் சர்வதேச தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இவரது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
-
கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை
கொரோனா வைரஸ் காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி உலமா சபை அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-
சீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய கல்கிஸ்ஸை சந்தேகநபர் கைது
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தினமான, கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.