-
“பெருநாள் ஆடைக் கொள்வனவிற்காக பெண்கள் கடைத் தொகுதிகளுக்கு வருவதை கண்டிப்பாகவும் முற்றாகவும் தவிர்ந்துகொள்ளல் வேண்டும்”
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இணைந்து விடுத்துள்ள அறிவித்தல் இன்று 2020.05.13ஆம் திகதி காத்தான்குடி நகர சபை தவிசாளர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இணைந்து பெருநாள் காலங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறைகள் சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
-
சுமந்திரனுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான கலந்துரையாடல்
கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது. கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர், சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு,சோதனை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிபொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதி ஒன்று இன்று 08 வெள்ளிக்கிழமை பொலிஸ் விஷேட அதிரடிப்படை பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.குற்றப் புலனாய்வுத்துறை – சி.ஐ.டி. பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கொழும்பில் இருந்து நேற்று 07 வியாழக்கிழமை வருகைதந்த குற்றப் புலனாய்வுத்துறை பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்ட மேற்படி விடுதி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முழுமையாக சோதனையிடப்பட்டது.
-
மாணவர்களை அழைத்துவர லண்டனுக்கு விசேட விமானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, இன்றையதினம் (03) முதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
-
தபால் நிலையங்களுக்கு ஆவணங்களுடன் வருவோர் பேனா கொண்டு வரவும்
கொழும்பு: தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பொதுமக்களிடம் இக்கோரிக்கையை இன்று (30) முன்வைத்துள்ளார்.
-
ஜூனில் தேர்தல்?
மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரத் துறையினர் கொவிட்19 தொற்று பரவலை நூறுவீதம் கட்டுப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
-
மேலும் 5 பேர் அடையாளம்: மொத்தம் 627
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (29) இரவு 7.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் எண்ணிக்கை 622 இலிருந்து 627 ஆக அதிகரித்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 இலிருந்து 136 ஆக அதிகரித்துள்ளது.
-
பௌத்த சமயத்தில் A சித்தி பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மாணவன்
குருணாகல் மலியதேவ கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் குருணாகல் கிரியுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மொஹமட் றிஸ்மி மொஹமட் றஸ்லான் எனும் முஸ்லிம் மாணவன் நேற்று முன்தினம் (27) வெளியாகிய சாதாரணதர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பெளத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று அரிதான சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
-
மேலும் 15 பேர் அடையாளம்
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (28) பிற்பகல் 7.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் எண்ணிக்கை 596 இலிருந்து 599 ஆக அதிகரித்த நிலையில், இரவு 8.05 மணியளவில் மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கை 599 இலிருந்து 611 ஆக அதிகரித்துள்ளது.
-
O/L 9A – up to nowBatticaloa Central Zone
Kathankudy Division Meera Balika 31Al Hira 10Al Ameen 6Zaviya 6KCC 4Millath 8Bathuriya 1
-
10,346 பேர் 9 பாடங்களிலும் A சித்தி
கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சைக்கு தோற்றிய 73.84 வீதமானோர் சித்தியடைந்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 9 பாடங்களிலும் A சித்தி பெற்றவர்கள் – 10,346 பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றவர்கள் – 73.84% கணிதத்தில் சித்தியடைந்தவர்கள் – 66.82% பரீட்சைக்கு தோற்றியோர் – 556,256 பேர் விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் – 717,246 பேர்