Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “துடைத்தெறியப்ப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலைமைத்துவம் எது என்பதும் இப்போது நன்கு தெளிவாகியுள்ளது”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    காத்தான்குடி: “தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்கள் இருப்பதனை நிரூபித்துள்ளன. அதில் ஒன்று நாகரிகமும் ஒழுக்கமும் நிறைந்த தலைமைத்துவம், மற்றையது காடைதனத்திற்கும் வன்முறைகளுக்கும் வழிகாட்டும் தலைமைத்துவமாகும். இதனைத் தற்போது மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

    கொழும்பு: முன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவருமான சமல் ராஜபக்ச தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு இணங்கி தேசிய அரசாங்கத்தில் தான் இணைந்துகொள்வதாக அவர் கூறினார்.

  • ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் நிறுத்தம்!

    ஓமந்தை: ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும், தெற்கிலிருந்து வடக்குக்கும் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

  • தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 05 தமிழர்கள், ஹிஸ்புல்லாஹ் உட்பட10 முஸ்லிம்கள் உள்ளடக்கம்

    கொழும்பு: தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

  • “அபசரணய்” கூறிய முஸ்லிம் இளைஞருக்கு எதிராக வழக்கு

    அளுத்கம: பெரும்பான்மை இன யுவதியொருவருக்கு அபசரணய் என்ற வார்த்தையைக் கூறியமைக்காக முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு எதிராக களுத்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாக இருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் பாணந்துறையிலிருந்து அளுத்கம வரையிலான நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் கடைகளுக்கு ‘அபசரணய்’ என்றார்.

  • நெற்களஞ்சியமாக மாறுகிறது மஹிந்தவின் மத்தல விமான நிலையம்

    ஹம்பாந்தோட்டை: ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சிய சாலைகளில், யால போக அறுவடையின் போது கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு, இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் எவியேசன் நிறுவனம் ஆரம்ப அனுமதியை வழங்கியுள்ளது.

  • “பொத்துவில், ஒலுவில் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுவதை நாம் இனிவரும் காலங்களில் அனுமதிக்கப் போதில்லை”: ஹரீஸ்

    – ஹாசிப் யாஸீன் பொத்துவில்: யாழ்ப்பாணத்திலும், சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியுமென்றால், ஏன் பொத்துவில், ஒலுவில் பிரதேச முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பொத்துவிலில் இடம்பெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினார்.

  • இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் அம்பாறை மாவட்டதிற்கான பிரச்சார செயற்குழுக் கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: இலங்கை புலம் பெயர் தொழிலாளர் கூட்டணியின் அம்பாறை மாவட்டதிற்கான பிரச்சார செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அக்கரைபற்றில் நடைபெற்றதோடு செயற்குழு நிர்வாகமும் அங்குரார்ப்பணம் செயப்பட்டது. இதில் பிராந்தியத்தில் இருகின்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டது குறுப்பிடத்தக்கது.

  • நேற்று இடம்பெற்ற ஜூம்ஆவின்போது தேர்தல் தொடர்பாக கூறப்பட்ட விடயங்கள்

    – எம்.எச்.எம். அன்வர் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும்,  அப்துர்ரஹ்மானும் போட்டியிட்டனர். அல்லாஹ்வின் நாட்டம் ஹிஸ்புல்லா தோல்வியடைந்தார். அல்லாஹ் எதை நாடியுள்ளானோ அதுதான் இடம்பெற்றது. அவருக்கு இதைவிட சிறந்த பதவியை நாடியிருக்கிறானோ அல்லது 5 வருடங்களுக்கு தான் செய்த தவறை நினைப்பதற்காக அப்படியானதொரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளானோ தெரியாது.

  • ஓட்டமாவடி கொலை: தனிப்பட்ட காரணங்களுக்காகவே இடம்பெற்றது!

    ஓட்டமாவடி: தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பகுதியில் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியின் ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

  • தோளில் குழந்தையுடன் இதயத்தை உருக்கும் பேனா விற்ற சிரியாவின் அகதிக்கு மனமிரங்கிய மக்கள்

    பெய்ரூட்: தனது தோளில் குழந்தையைத் சுமந்ததவாறு பேனா விற்பனை செய்யும் ஒரு சிரிய அகதியின் புகைப்படம் இவ்வாரம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மனதை உருக்கும் குறித்த புகைப்படத்தில் தூங்கும் தனது குழந்தையை தோளில் சுமந்தவாறு சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தெருவில் பேனா விற்கின்றார்.

  • “‘தங்க ரயில்’ இருக்கும் இடம் தெரிந்துவிட்டது”

    வ்ரோக்லா: போலந்தில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன ரயில் ஒன்றில் நாஜி காலத்து தங்கப் புதையல்கள் காணப்படுவதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், அந்த ரயில் இருக்கும் இடத்தை ‘அனேகமாக கண்டுபிடித்துவிட்டதாக’ அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.நிலத்திற்குள் ஆழ ஊடுருவி பார்க்கும் ராடார் கருவி மூலம் கிடைத்துள்ள படங்களை தான் பார்த்துள்ளதாக போலந்தின் கலாசாரத்துறை அமைச்சர் கூறுகின்றார்.

←Previous Page
1 … 340 341 342 343 344 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar