ஓட்டமாவடி: தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பகுதியில் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியின் ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி ஓட்டமாவடி பகுதியில் வைத்து 35 வயதான ஜமால்தீன் அமீன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 5 வருடங்களுக்கு முன்னர் தேர்தலின் போது ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவர் சாட்சியாக இருந்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கொலை இடம்பெற்ற போதும், தேர்தலின் போது இது நடந்திருப்பதாக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில், கொலையுடன் தொடர்புபட்ட கல்முனையைச் சேர்ந்த 48 வயதான நபர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நேற்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
Published by


Leave a comment