Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்” :மைத்ரிபால சிறிசேன

    பொலன்னறுவை: இலங்கையின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக சீரமைக்கப்படுவது அவசியம் என கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அப்படிச் செய்தால் மட்டுமே இனிவரும் தேர்தல்களில் கட்சி வெற்றிபெரும் எனவும் அவர் அக்கட்சியின் 64ஆவது வருடாந்திர மாநாட்டில் உரையாற்றும்போது கூறினார்.

  • அ(ழகி)கதிகளை மறந்த அறபு நாடுகள்…

    – MJ டமஸ்கஸ்: சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உந்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான சிரியாவின் அகதிகள் ஐரோப்பா நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். பல்லாயிரம் வருடங்கள் இறைத் தூதர்களின் வருகை, புராதன, பாரம்பரிய வரலாறுகளைக் கொண்டமைந்த சிரியா, டமஸ்கஸ், அலப்போ, லடேக்கியா, டார்டஸ் மற்றும் பல்மிரா ஆகிய புராதன நகரங்களையும் கொண்டமைந்த ஓர் நாடாக வரலாற்றில் பதியப்பட்டிருந்தது.

  • ஹாஜிகள் கவனத்திற்கு (ஹஜ் செய்பவர்களுக்கான சில ஒழுக்கங்கள்) – காணொளி

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா (30.08.2015) (சுவனம்)

  • கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர் வெற்றிடம்

    திருகோணமலை: கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் ஐவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், அம்பாறை மாவட்டத்தின் 5 பேர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

  • மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

    ஹம்பாந்தோட்டை: ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்தல விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று நெல் மூடைகளை ஏற்றிய முதலாவது தொகுதி லொறி மத்தல விமான நிலையத்திற்குச் சென்றது.

  • நாடாளுமன்றில் உறங்கிய நிமல் சிறிபால

    கொழும்பு: புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா வழமையை போன்று நேற்றும் உறங்கியுள்ளார். நேற்றைய தினம் எட்டாவது நாடாளுமன்றின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் அருகில் அமர்ந்திருந்தார்.

  • விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தயால இலவச வைபை

    கொழும்பு: விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தயாலமும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வைபை (WiFi) வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

  • அறபு இஸ்லாமிய சான்றிதல்களை வெளிவிவகார அமைச்சு அத்தாட்சிப் படுத்த மறுக்கிறதா?

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல பட்டதாரி மாணவர்கள் கண்கலங்கி முறையிடுகின்றார்கள்.

  • றிசாத் பதியுதீன் 8 வது பாராளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் ஆற்றிய உரையின் தொகுப்பு

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கெளரவ சபாநாயகர் அவர்களே, இன்று கெளரவ பிரதம அமைச்சரினால் பிரேரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து கெளரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் ஆமோதிக்கப்பட்டுச் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட உங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் உங்களுடைய கட்சிக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சார்பாகவும் நான் இந்த இடத்திலே வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • அடையாள அட்டை: 9 இலக்கங்களுக்கு பதிலாக 12 இலக்கங்கள்

    கொழும்பு:  எதிர்வரும்2016 ஜனவரி மாதம் முதல் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டைகளின் தொடர் இலக்கங்களை பதிவு செய்யும் போது 9 இலக்கங்களுக்கு பதிலாக 12 இலக்கங்களை பதிவு செய்வதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு இன்று பொலனறுவையில்

    பொலன்னறுவை: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாட்டு நிகழ்வுகள் இன்று பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப் படுகிறது.

  • புடபெஸ்டிலுள்ள ரயில் நிலையத்தை மூடியது ஹங்கேரி

    பேர்லின்: குடியேறிகள், ஹங்கேரி ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், அந்நாட்டு தலைநகர் புட்டாபெஸ்டிலுள்ள மிகப் பெரிய ரயில் நிலையத்தை அதிகாரிகள் மூடியதையடுத்து , நூற்றுக்கணக்கான குடியேறிகள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “ஜெர்மனி மற்றும் சுதந்திரம்” என்று கோஷமெழுப்பிய குடியேறிகளை, அங்கிருந்து செல்லும்படி அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

←Previous Page
1 … 337 338 339 340 341 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar