டமஸ்கஸ்: சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உந்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான சிரியாவின் அகதிகள் ஐரோப்பா நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். பல்லாயிரம் வருடங்கள் இறைத் தூதர்களின் வருகை, புராதன, பாரம்பரிய வரலாறுகளைக் கொண்டமைந்த சிரியா, டமஸ்கஸ், அலப்போ, லடேக்கியா, டார்டஸ் மற்றும் பல்மிரா ஆகிய புராதன நகரங்களையும் கொண்டமைந்த ஓர் நாடாக வரலாற்றில் பதியப்பட்டிருந்தது.
இன்று அந்நாடு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. எண்ணிலடங்காத பெண்கள் ஆயுததாரிகளால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். இருதரப்பின் எதிரிகள் என்று கருதப்படுபவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதிகளின் பாலியல் அடிமைச் சந்தைகளில் சிறுமிகளும், கன்னிப் பெண்களும், விதவைகளும் என வகைவகையாக விற்கப்படுகின்றனர்.
உயிர் போனாலும் பரவாயில்லை. எப்படியாவது வரலாற்றுப் பரம்பறையைக் கொண்ட இம்மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்ற கதியில் அகதிகளாக சிரியாவின் எம் உறவுகள் இன்று “குடியேறிகள்” என்ற மேற்கத்தைய அகதி வார்த்தையை உபயோகித்து, ஐரோப்பாவின் எல்லைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சிரியாவில் இருந்து தப்புவதானால் ஒன்று ஈராக்கிற்கு போகவேண்டும். ஆனால் ஈராக்கிலும் இதே நிலை என்பதாலும், சுற்றுச் சூழலில் அமைந்திருக்கும் ஜோர்டன், லெபனான் ஆகிய அரபு நாடுகள் தங்களது எல்லைக் கதவை அடைத்துக் கொண்டதாலும், துருக்கியை வந்தடைந்த சிரியாவின் அகதிகள், துருக்கியிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய எத்தனிக்கின்றனர்.
பாதுகாப்பு என்ற ஒரே நோக்கில் குழந்தைகளுடனும், பெண்களுடனும் துருக்கியிலிருந்து வெளியேறும் அகதிகள், கடலில் தங்கள் உயிரை அர்ப்பணிக்கும் கொடூரங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன.
பாதுகாப்பில்லாத சிற்சிறு படகுகளிலும், பயணிப்பதற்கு உதவாத கப்பல்களிலும் உயிரைக் கைப்பிடித்துக்கொண்டு பயணித்த பல்லாயிரம் அகதிகள், கடலில் சங்கமமாகினர். குழந்தைகளினதும், பெண்களினதும் உடல்கள் இன்றும் ஐரோப்பிய எல்லைக் கடல்களில் மிதந்துகொண்டிருக்கின்றன.
ஓர் காலத்தில் சவுதி, டுபாய் போன்ற செல்வச் சீமானர்கள் திருமணம் முடிப்பதற்காகவும், தங்களது சுகபோகங்களைப் போக்கிக்கொள்வதற்காகவும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் தெரிவு செய்த நாடாக சிரியா இருந்து வந்தது.
ஐரோப்பாவை ஒத்த தோற்றத்தில் காணப்படும் சிரியாவின் கன்னிப்பெண்களும், இளம் பெண்களும் அரபு சிம்மாசனங்களை அன்று தன் அழகால் வளைத்துப் போட்டிருந்தனர்.
ஐரோப்பாவின் முதன்மை அழகிகள் பிரான்ஸ் நாடட்டின் பெண்களே என்று ஐரோப்பியர்கள் பெருமிதமாகக் கூறிக்கொண்ட போதிலும், ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் பேரழகிகளாக சிரியாப் பெண்கள் இருந்தனர்.
1990 வளை குடா யுத்தத்தின் பின்னர் அரபு வலயத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும், தங்களது நாட்டை மென்மேலும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கிலும் சவுதி ஆண்கள் வெளிநாட்டில் சென்று திருமணம் செய்யக்கூடாது என்ற தடை சவுதி அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிரியாவின் பெண்களை அதிகமாகத் திருமணம் செய்துவந்த சவுதி ஆண்கள் நிறுத்திக் கொண்டனர். இன்றும்கூட சவுதி வம்சாவழியில் சிரியப் பெண்கள் ஓர் கணிசமான புள்ளியில் நிறைந்திருக்கின்றனர்.
பிரமாண்டமான நிலப்பரப்பையும், வசதிகளையும் கொண்டமைந்த அரபுலக செல்வந்த நாடுகள் சிரியாவின் அகதிகளுக்கு இன்றுவரைக்கும் குரல்கொடுக்க, உதவி வழங்க முன்வரல்லை. குரல் கொடுப்பதைவிட தனது நாட்டுக்குள் அடைக்களம் கொடுக்க தங்களது முகங்களை இந்நாடுகள் திருப்பிக்கொண்டுள்ளன.
இதன்காரணமாக ஐரோப்பாவிற்கு தங்களை அர்ப்பணிக்கும் நோக்கில் இளம் பெண்களும், சிறுவர்களும் தங்களிடம் இருப்பதை எடுத்துக்கொண்டு கடல்வழிகாக ஐரோப்பாவிற்குள் நுழைகின்றனர். நுழைவதற்கிடையில் பல்லாயிரம் உயிர்கள் கடலில் காவுகொல்லப்படுகின்றன.
ஐரோப்பாவின் ஆரம்ப எல்லை நாடுகளான ஹங்கேரி, கிரீஸ் மற்றும் அவுஸ்ரியா ஆகிய நாடுகளில் குளிருக்கு மத்தியில் போதிய உடையின்றி, உணவின்றி, மலசலகூடம் போன்ற அத்தியவசிய வசதிகளின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் எடுத்ததற்கெல்லாம் விமர்சிக்கும் மேற்கு நாடுகளே, இன்று முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வந்திருக்கின்றன. இந்தவகையில் ஜேர்மனி, அவுஸ்ரியா போன்ற நாடுகள் ஐ.நாவின் உதவியுடன் ஐரோப்பாவில் கால்பதிப்பவர்களை பதிவு செய்யுமாரு கேட்டிருக்கின்றது. பிரிட்டன் இந்த அகதிகள் விடயத்தில் உதவிக்கரம் நீட்ட முடியாமல் நழுவிக்கொள்ள முனைகிறது. இத்தாலி அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது.
தீவிரவாதிகளை அழிக்கப்போகிறோம் என்று உலகுக்கு ‘படம்’ காட்டிய சவுதி இளவரசர்களுள் ஒருவர்
என்றாலும், ஐ.நா. அகதிகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு, அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் தாங்கள் அகதிகள் விடயத்தில் கருணை காட்டுமாரு கேட்டிருக்கின்றது.
“ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்கப்போகிறோம்” என்று கடந்த வருடம் கிளம்பிய அமெரிக்காவும், பிரிட்டனும், சவுதி இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பெண் விமானியும் இதுவரை எத்தனை தீவிரவாதிகளைக் கொண்றொழித்திருக்கின்றனர்? என்பதை நாம் நமக்குள் புன்னகையுடன் கேட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த வாரம் அவுஸ்ரியாவில் லொறி ஒன்றில் 70 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்த சடலங்கள் யாருடையது என தெரியவில்லை. முஸ்லிம்களாக இருப்பினும் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டனவா என்றெல்லாம் கேட்க முடியாத பரிதாப நிலையில் முஸ்லிம் உம்மத் இருக்கின்றது.
தீவிரவாதிகளை அழிக்கப்போகிறோம் என்று உலகுக்கு ‘படம்’ காட்டிய அமீரகத்தின் இராணுவப் பெண்
சிரியாவிலும், ஈராக்கிலும் மறைந்துகிடக்கும் பொக்கிஸங்களை அகழ்ந்தெடுத்து முடியும் வரைக்கும் அமெரிக்காவின் விளையாட்டுக்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இன்று ஐ.எஸ். போனால், நாளை இன்னுமொரு இயக்கத்தை அமெரிக்கா அரபு பூமியல் நிலைநாட்டி, தான் நினைப்பதை சாதித்துக்கொள்ளும். அதற்கு உதவியாக சவுதியும், கட்டாரும், அமீரகமும் எப்போதும் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையவே கிடையாது!!MJ
Leave a comment