-
தோல்வி பயத்தினால் என்னை விமர்சிக்கின்றனர்
– தலவாக்கலை பி.கேதீஸ் சுயேட்சையாக களமிறங்கியுள்ள நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்;கட்டும் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
-
“2011- ஆட்ட நிர்ணயம்”, உபுல் தரங்க 2 மணி நேரம் வாக்குமூலம்
கொழும்பு: கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க இன்று (01) விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
-
சீனாவில் மற்றுமொரு வைரஸ் கண்டுபிடிப்பு
பீஜிங்: சீனாவில் தோன்றி பெருந்தொற்றாக மாறி உலகெங்கிலும் பரவி ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸை அடுத்து, மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய ஒரு புதிய காய்ச்சல் சீனாவில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
இந்தியா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் திடீரென ஏற்பட்ட போர் பதட்டத்திற்கான பின்னணி என்ன ?
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது இந்தியா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளதனால் உலகத்தின் கவனம் லடாக் எல்லையை நோக்கி திரும்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகளின் எல்லைகள் இயற்கையாக உருவானதல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சில நாடுகளுக்கிடையில் கடல் எல்லைகளை பகிர்ந்துகொள்வதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றபோது, நிலத்தினை எல்லைகளாக கொண்ட நாடுகளுக்கிடையில் எல்லை பிரச்சினையில்லாமல் இருக்குமா ? ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள் தோன்றுவது வழமை.
-
புலிகள் மேற்கொண்ட மெகா கொள்ளை- காத்தான்குடி சந்தித்த மற்றுமொரு சோகம்
காத்தான்குடி: காத்தான்குடியின் மறக்க முடியாத அந்த 1990 ஏப்ரல், மே மாதங்கள். சுட்டெரிக்கும் வெயில். நோன்பு, சித்திரைப் புதுவருடம், நோன்புப் பெருநாள் என 1985 இற்குப் பின்னர் காத்தான்குடி வழமைக்குத் திரும்புகிறது. புலிகள்ஆயுதங்களைக் கையிலெடுத்து பகிரங்கமாக வெளியே வந்திருப்பதால் படுவான்கரை வயல்காணிகளின் பக்கம் எம் மக்களின் அவதானம் இருக்கவில்லை.
-
இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது கவசவாகனங்கள்
கொழும்பு: இலங்கை இராணுவத்தின் பொறியியல்பிரிவினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது கவசவாகனங்களை (யுனிபவள்) இராணுவத்தளபதிலெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்றுவெள்ளிக்கிழமை காலை பத்தரமுல்லையில்அமைந்துள்ள இராணுவத்தலைமையகத்தில்பார்வையிட்டார். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில்பணியாற்றும் இலங்கை படையினரின்பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவைமாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால்கையளிக்கப்பட்டது.
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெறும்
திருகோணமலையில்: இம் முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் 20 ஆசனங்களை பெறுவதற்குஉத்தேசித்துள்ளோம் என முன்னால்எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள அவரதுஇல்லத்தில் நேற்று (25) இடம் பெற்றஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறுதெரிவித்தார்.
-
ஜும்ஆ மற்றும் ஐவேளை கூட்டுத்தொழுகைகளுக்கு ஒரே நேரத்தில் நூறு பேர் வரை கலந்துகொள்ள அனுமதி
கொழும்பு: ஜும்ஆ மற்றும் ஐவேளைகூட்டுத்தொழுகைகளுக்கு ஒரே நேரத்தில்நூறுபேர் வரை கலந்துகொள்ள சுகாதாரஅமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள்அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வாசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளகடிதத்திலேயே மேற்கண்ட அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
-
ஒருமாகாணத்தை ஒரு இனத்திற்குரியது என்று எவராலும் உரிமைக் கொண்டாட முடியாது: பிரதமர்
குருநாகல்: இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒருமாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமைகொண்டாடுவது தவறானதாகும். தெற்கில்பிறந்தவருக்கும், வடக்கில் பிறந்தவருக்கும்சமவுரிமை உண்டு. ஒரு இனத்திற்கு மாத்திரம்முக்கியத்துவம் வழங்கி, தேசியத்தைகட்டியெழுப்புவது எமது நோக்கமல்ல எனதெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மதம்,மற்றும் மத தலைவர்களை அவமதிக்கும்விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களைமுன்னெடுப்பதை அரசியல்வாதிகள்தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
-
பஸ் முன்னுரிமை பாதைச்சட்டம் இன்று முதல் அமுல்
கொழும்பு: கொழும்பு நகரில் பொரளையில் இருந்துபுறக்கோட்டை வரையான பஸ் முன்னுரிமைபாதைச்சட்டம் இன்று முதல் அமுலாகுவதாகமேல் மாகாண சிரேஷ் பொலிஸ் மா அதிபர்தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கு முன்னர் கடந்த 8 ஆம் திகதிமுதல் மொரட்டுவையில் இருந்து புறக்கோட்டைவரை ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் மிகவும்வெற்றியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
-
சவூதியில் ஊரடங்கு நீக்கம்: ஹஜ் பற்றிய அறிவிப்பு தாமதம்
றியாத்: சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டிருந்த தேசிய அளவிலான ஊரடங்கு நேற்று அகற்றப்பட்டது. எனினும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. அனைத்து பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும் சர்வதேச பயணங்கள் மற்றும் சமய யாத்திரைகள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதில் புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல்களும் நேற்று திறக்கப்பட்டன.
-
கருணாவிற்கு சி.ஐ.டி. அழைப்பு
கொழும்பு: தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்தலைவரும் தமிழர் மகாசபையின் அம்பாறைமாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான்என்றழைக்கப்படும் விநாயகமூர்த்திமுரளீதரனிடம் வாக்கு மூலமொன்றைப்பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர்அழைப்பு விடுத்துள்ளனர்.