WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன?

    லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்? உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும். ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும்.

  • 27 நாடுகள் கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்

    புருசெல்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம் என ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் பேட்டியளித்துள்ளார். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.

  • சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள்! 2 இலங்கை இளைஞர்கள் கைது

    சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பொலீசுக்கு தகவல் கிடைத்தது. பொலீசார் விரைந்து வந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தின் பயணத்தை ரத்து செய்தனர். பின்னர் அதில் ஏற்றப்பட்டு இருந்த பயணிகளின் உடைமைகளை இறக்கி சோதனை செய்தனர்.

  • பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

    லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ஸ்ரேலிங் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் விலை சர்வதேச சந்தையில் 1.5 டொலராக உயர்ந்திருந்தது.

  • பிரிட்டிஷ் பிரதமர் கேமரன் பதவி விலகப் போவதாக அறிவிப்பு

    லண்டன்: ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்று அளித்த தீர்ப்பை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். சற்று முன்னர் தனது 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய டேவிட் கமரன், எதிர்வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் , கமரன் இந்த…

  • பிரிட்டிஷ் வாக்கெடுப்பு: 52 சதவீதம் விலக ஆதரவு

    லண்டன்: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் “வெளியேற வேண்டும்” என்று வாக்களித்துள்ளனர். ஏறக்குறைய 52 (51.9) சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் , விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வெளியுறவுச் செயலர் பிலிப் ஹேமண்ட் வாக்காளர்கள் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

  • பத்ர் யுத்தமும் அதன் படிப்பினைகளும்- சொற்பொழிவு

    எம். எச்.எம். அன்வர் காத்தான்குடி: பத்ர் யுத்தமும் அதன் படிப்பினைகளும் எனும் தலைப்பில்  ரமழான் பிறை 17 அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பத்ர் யுத்தம் தொடர்பான சொற்பொழிவொன்று இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் உரையாற்றினார்.

  • ஊருக்குப் பழகிவிட்டது பெண்கள் சொப்பிங்

    MJ காத்தான்குடி: இப்போதெல்லாம் பெண்களும் குமரிகளும் குடும்பம் குடும்பமாக கடைத்தெருவுக்கு வந்து தங்களுக்குரிய பெருநாள் ஆடைகளைக் கொள்வனவு செய்வதானது காத்தான்குடிக்குப் பழகிப்போய்விட்டது. கடைகளுக்குள் சென்று தங்களுக்குரிய பெருநாள் ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்கு இடம்போதாத குறையாக ஆண்கள் வெளியில் காத்திருக்கின்ற நிலைக்கு பெண்களின் சொப்பிங் ஊரில் கலைகட்டுகிறது.

  • 43 வருட உறவு: ஐரோப்பிய யூனியனில் பிரித்தானியா நீடிக்குமா?

    லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதா அல்லது தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு இங்கிலாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். நாளை காலை முடிவுகள் அறிவிக்கப்படும். ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கென, 1993ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

  • மஹியங்கனையில் நடந்தது என்ன?

    மஹியங்கனை: மஹியங்கனையில் சற்று முன்னார் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக கடும் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல் விவகாரத்தை அடுத்து அண்மைய நாட்களில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இனவாதச் செயற்பாடுகள் அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தன.

  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம்

    டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான அனில் கும்ப்ளே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தரம்சாலாவில் நடந்த நிகழ்ச்சியில், அனில் கும்ப்ளேவை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ள அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.

  • கட்டுநாயக்கா விமான நிலைய மலசல கூடத்தில் சுத்தம் செய்ய நீர் இல்லை! இனி டிசுதான்

    – SHM கொழும்பு: கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் (சுத்தப்படுத்தும் உபகரணம்) அகற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலையத்தில் உள்ள மலசலகூடம் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டது. அதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொயிலட் டிசு, சகல மலசலகூடங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

←Previous Page
1 … 197 198 199 200 201 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar