ஊருக்குப் பழகிவிட்டது பெண்கள் சொப்பிங்

  • MJ

ladiesகாத்தான்குடி: இப்போதெல்லாம் பெண்களும் குமரிகளும் குடும்பம் குடும்பமாக கடைத்தெருவுக்கு வந்து தங்களுக்குரிய பெருநாள் ஆடைகளைக் கொள்வனவு செய்வதானது காத்தான்குடிக்குப் பழகிப்போய்விட்டது. கடைகளுக்குள் சென்று தங்களுக்குரிய பெருநாள் ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்கு இடம்போதாத குறையாக ஆண்கள் வெளியில் காத்திருக்கின்ற நிலைக்கு பெண்களின் சொப்பிங் ஊரில் கலைகட்டுகிறது.

இது இஸ்லாத்தின் பார்வையில் கூடுமா? கூடாதா?? என்ற விமர்சனங்களுக்கப்பால்,

காத்தான்குடியைப் பொருத்தமட்டில் ஓர் புதிய கலாசாரமாகவே பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னரெல்லாம் கனவன்மார்களும், சகோதரர்களும் எடுத்துக்கொடுக்கும் பெருநாள் ஆடைகளை வீட்டிலிருக்கும் பெண்கள் ஏற்றுக்கொண்டு, அவ்வாடைகளை அணிந்து வந்தனர். அன்று பாவகாரியமாக கருதப்பட்டுவந்த இந்த பெண்கள் சொப்பிங், இன்றைய காலகட்டத்தில் MJவிமர்சிக்க முடியாத அளவுக்கு காத்தான்குடி பஸாரை ஆக்கிரமித்திருக்கின்றது.

குறிப்பாக கொழும்பில் வாழ்வோர் (காத்தான்குடி வாசிகள்) வழமையாக குடும்ப சகிதம் அல்லது மனைவிமார்களின் தலைமையில் அன்று முதல் இன்றுவரை சொப்பிங் அங்கு இடம்பெற்று வருகின்றன. அது கொழும்பு. அதனால் அப்படித்தான் இருக்கும். (?)

ladies

yourkattankudy/social

இதே போல், வெளிநாடுகளில் வசிப்போரும் குடும்ப சகிதம் அல்லது மனைவிமார்களின் தலைமையில் சொப்பிங்கிற்கு அனுப்பி வைக்கும் நடைமுறைகளும் அங்கு இருந்து வருகின்றன. இது அங்கெல்லாம் புதுவிடயமல்ல.

கொழும்பிலும், வெளிநாடுகளில் வசிக்கும் எமது ஊர்ப் பெண்கள் பலர் அங்கு வாகனங்கள் ஓட்டுவதும், சரளமாக சொப்பிங் சென்றுவருவதும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
ஆனால் ஊரில் எல்லோருக்கும் ஒரு கவலை, “எப்படி இருந்த ஊர் இப்படி ஆகிவிட்டதே!”

பெண்கள் சென்று தங்களுக்குரிய ஆடைகளை அவர்களே சென்று  பெற்றுக்கொள்வது சிறந்ததாக பார்க்கப்பட்டாலும், கடை நடத்துனர்களும் பணியாட்களும் முழுக்க முழுக்க, ஆண்களாகவே இருக்கின்றனர்.

இதைவிட, காத்தான்குடியில் செலக்ஸன் இல்லாவிட்டால், மட்டக்களப்பிற்கும் மற்றும் கல்முனைக்கும் சென்று வருகின்ற சொப்பிங் நிகழ்வுகளும் தாராளமாக இடம்பெறுகின்றன.

எமது ஊரைப் பொருத்தமட்டில் இந்த பெண்கள் சொப்பிங் எப்படி மக்களால் பார்க்கப்படுகிறது, உலமாக்கள் இந்த பெண்கள் சொப்பிங் விடயத்தை அங்கீகரிக்கின்றார்களா, அங்கீகரிக்கவில்லையா அல்லது வாய்மூடி மௌனம் காக்கின்றனரா போன்ற விடங்கள் அலசப்படத்தக்கது.

இது இவ்வாறிருக்க,

பெருநாள் பஸாரிலும் எதிர்காலத்தில் சமநேரத்தில் பெண்கள் சொப்பிங் இடம்பெற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பெருநாள் மற்றும் அடுத்துவரும் இருதினங்களுக்கு பெண்கள் கடற்கரைக்குச் செல்லக்கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் ஊரில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. அச்சட்டமும் இப்போது கடலோடு சங்கமித்துவிட்டது.

காலத்திற்குக் காலம் சட்டம் போடுவதற்கும், சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நாகரிகத்தின் வளர்ச்சி இனிமேல் இடமளிக்கப்போவதில்லை. மக்களும் எழுதப்படாத “பஞ்சாயத்து”ச் சட்டங்களைப் பின்பற்றத் தயாரில்லை.

ஊர் மாறிவிட்டதா? மக்கள் நாகரிக வளர்ச்சியில் மூழ்கிவிட்டார்களா…?? ஊகிக்கமுடியாமல் இருக்கின்றது.

நாளை தங்களது சொந்த வாகனங்களில் தனிமையிலோ அல்லது குடும்ப சகிதமோ பெண்கள் வந்து பெருநாள் சொப்பிங் செய்வார்கள் எமது கடைத்தெருக்கலில்…

அது, பெண்கள் நடந்து வீதியில் திரிவதைப் பார்க்க நல்லது என எமது ஊர் கருதும் அப்போது.MJ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s