-
துருக்கி: வரலாற்றில் முதன் முறையாக ராணுவத்தின் சதி முறியடிப்பு!
துருக்கி நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றி வருவதாக அந்நாட்டு ராணுவம் பெருமையாக கூறிவந்தாலும், அந்நாட்டு வரலாற்றில் ஜனநாயகத்தை முறியடித்து இதுவரை 5 முறை ஆட்சியை கவிழ்க்க ராணுவம் முயற்சி மேற்கொண்டதை மறுக்க முடியாது.
-
சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் மொடல் அழகி
லாஹூர்: பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மொடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச்.சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார்.
-
“மஹிந்த குடும்பத்தில் யாரும் உயர்தரத்தில் சித்தியடையவில்லை”
மாத்தறை: மஹிந்த குடும்பத்தில் யாரும் உயர் தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை கபுருபிடிய பிரதேசப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி நேற்று கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
-
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு: 200 பேர் பலி
இஸ்தான்புல்: துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்.
-
யாழ்ப்பாணம் பெரிய மொகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கனடா பாராளுமன்ற உறுப்பினர்
கரீம் ஏ. மிஸ்காத் யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம்: இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடா லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் “கெரி ஆனந்தசங்கரி” நட்புரீதியான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி, பெரிய மொகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு நேற்று விஜயம் செய்தார். அவர் முஸ்லிம்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்:
-
துருக்கியை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது
இஸ்தான்புல்: பிரதமர் பினாலி யில்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. துருக்கியில் பிரதமர் யில்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. முன்னதாக தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரண்டு பெரிய பாலங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வந்தனர்.
-
தங்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டையை அணிந்து பிரபலமான இந்திய நபர்
புனே: முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டையை அணிந்து பிரபலமான இந்திய நபர், கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பிறந்த நாள் விழாவுக்காக அழைக்கப்பட்ட, 48 வயதான வர்த்தகப் பிரமுகரான தத்தா புகே என்ற அந்த நபரை, சில நபர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கற்கலால் தாக்கியதாக புனேவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தொடரும் சீதனத் திருமணங்கள்….
நோன்பு பெருநாள் முடிந்துவிட்டால் நமதூரில் ஏராளமான திருமணங்கள் அரங்கேறுவது வாடிக்கை. அந்த வகையில் இம்முறையும் அதிகமான திருமணங்கள் இடம்பெற்று வருவதை காண முடிகிறது. அவற்றில் பெரும்பாலான திருமணங்கள் “மணமகன் மணமகளுக்கு கொடுக்க வேண்டும்” என்ற இஸ்லாமிய சித்தாந்தத்துக்கு மாற்றமாக “மணமகள் மணமகனுக்கு கொடுக்க வேண்டும்” என்ற கேடுகெட்ட சிந்தனை அடிப்படையில் நடைபெறுகின்ற வரதட்சணை திருமணங்களாகவே காணப்படுகின்றன. நமதூரில் ஏகத்துவ பிரச்சாரம் துளிர்விட்ட காலம் தொடக்கம் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய காலம்
-
எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து!
தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை காண்பிக்க வேண்டியது அவசியம். பொதுவாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் இன்றோ 30 வயதிலேயே மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதற்கு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எலும்புகளுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்காமல் இருப்பதும்…
-
தொடர்ச்சியாக 11 தாக்குதல்களால் கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ்!
பரிஸ்: “சார்லி ஹெப்டோ” பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை நடந்த டிரக் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது 11 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி 7- 9 2015: கார்ட்டூன் பத்திரிகையான “சார்லி ஹெப்டோ” அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு 8 கார்ட்டூனிஸ்ட்கள் உள்பட 12 பேர் பலியாகினர். அருகில் இருந்த யூத மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.…
-
லோர்ட்ஸில் விளாசிய சதத்தை வித்தியாசமாக கொண்டாடிய மிஸ்பா எதற்காக தெரியுமா??
லண்டன்: இங்கிலாந்து மண்ணில் அதிக வயதில் சதம் விளாசிய அணித் தலைவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் பெற்றுள்ளார். லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 42 வயதான பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் சதத்தைப் பெற்றார்.