துருக்கி: வரலாற்றில் முதன் முறையாக ராணுவத்தின் சதி முறியடிப்பு!

turkey1துருக்கி நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றி வருவதாக அந்நாட்டு ராணுவம் பெருமையாக கூறிவந்தாலும், அந்நாட்டு வரலாற்றில் ஜனநாயகத்தை முறியடித்து இதுவரை 5 முறை ஆட்சியை கவிழ்க்க ராணுவம் முயற்சி மேற்கொண்டதை மறுக்க முடியாது.

மே 27, 1960

துருக்கி வரலாற்றில் முதன் முறையாக கடந்த 1960ம் ஆண்டில் ஜனாதிபதி Celal Bayar மற்றும் பிரதமரான Adnan Menderes ஆகிய இருவருக்கும் இடையில் அரசியல் முரன்பாடுகள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து மே 27ம் திகதி 38 ராணுவ வீரர்கள் பிரதமரை பதவியில் இருந்து வீழ்த்தினர். பின்னர், அரசியல் குற்றங்கள் புரிந்ததாக கூறி பிரதமருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ராணுவ தளபதியான Cemel Gursel என்பவர் ஆட்சியை பிடித்தார்.

மார்ச் 12, 1971

பின்னர், 1971ம் ஆண்டு பிரதமரான Suleyman Demirel என்பவர் ஆட்சியில் இருந்தபோது அந்நாட்டின் பணவீக்கம் 80 சதவிகிதத்தை நெருங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகுமாறு பிரதமருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

ஆணை கிடைக்கப்பெற்ற சில மணி நேரங்களில் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து துருக்கி வலது சாரி கட்சியை சேர்ந்த அரசாங்கம் தற்காலிகமாக ஆட்சியை அமைத்தது.

செப்டம்பர் 12, 1980

இரண்டு ராணுவ புரட்சிகளை தொடர்ந்து 1980ம் ஆண்டு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்களை தொடர்ந்து ‘அரசாங்கத்தை கலைத்து விட்டு ராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக’ அந்நாட்டு ராணுவ தளபதி தொலைக்காட்சியில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கப்பற்படை தளபதியான Bulend Ulusu என்பவர் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். Kenen Everen என்ற ராணுவ தளபதி ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

பெப்ரவரி 28, 1997

பின்னர், 1996ம் ஆண்டு இஸ்லாமிய கொள்கைகளை உடைய Islamist Welfare Party என்ற கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த கட்சியின் கொள்கைகளுக்கும் ராணுவத்தின் கொள்கைகளுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து ராணுவம் தானாக முன்வந்து பல்கலைக்கழங்களில் மாணவிகள் முகத்திரை அணிவதற்கு தடை உள்ளிட்ட பல மாற்றங்களை கொண்டு வந்தது.

turkey1

இறுதியாக, ராணுவத்தின் தலையீட்டால் அதிருப்தி அடைந்த பிரதமரான Necmettin Erbakan என்பவர் பதவியை ராஜினாமா செய்ததுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுப்பட தடையும் விதிக்கப்பட்டது.

யூலை 15, 2016

தற்போது 5-வது முறையாக அரசை கைப்பற்ற துருக்கி ராணுவம் நேற்று நள்ளிரவில் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியான எரோடகன்னின் ஆதரவு படை சாதகமாக இருந்ததால் கலகக்காரர்களை கொன்று ஆட்சி கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ ஆட்சியை நிறுவ முயன்ற கலகக்காரர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி எரோடகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி வரலாற்றில் இதுவரை 5 முறை ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவம் முயற்சி செய்துள்ள நிலையில், துருக்கியில் ஜனநாயகம் காக்கப்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s