பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான (WEDF) அமைப்பினால் விதவைகளுக்கான நோய் நிவாரணக் காப்புறுதித் திட்டம்

  • WEDF

salma wedfகாத்தான்குடி: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான (WEDF) அமைப்பினால் விதவைகளுக்கான நோய் நிவாரணக் காப்புறுதித் திட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டது. இது கடந்த 2015 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இம் முறை இரண்டாவது தடவையாக நடைபெறுகின்றது. இந்த திட்டமானது அமானா தகாபுல் நிறுவனத்துடன் இணைந்து விதவைகள் , நோயாளிகள் , 65 வயதுக்கு உட்பட்டவைத்தியசாலையில் தங்கி இருந்து வைத்தியம் பெறுபவராக இருந்தால் ஒரு நாளைக்கு ரூபாய் 1000 வீதம் வருடம் ஒன்றிற்கு ரூபாய் 25,000 வரையிலும் அதேபோன்று வைத்தியசாலை பரிசோதனைகளின் போது பணமும் வழங்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது அவர்களுக்கு அங்கங்களில் ஏதேனுமொரு ஆபத்து ஏற்பட்டால் ரூபாய் 150,000 உம் மரணம் ஏற்பட்டால் ரூபாய் 10,000+ 150,000 உம் வழங்கப்படுகின்றது. இந்தவகையில் பெண்கள் நோய்களோடு தங்களது கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். வைத்தியசாலை சென்று தங்கியிருப்பதென்றால் பல்வேறு வகையான பொருளாதார பிரச்சினை, பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டுமென்ற பிரச்சினை, தொழில் தடைப்பட்டு விடுமென்ற பிரச்சினை. எனவே இதனை சமாளிப்பதற்காக எங்களது சகோதரிகள் , விதவைகள் தங்கியிருந்து ஓய்வெடுத்து பிற்பாடு அவர்களுக்கு ஒரு உதவித்தொகையாக நாங்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 1000 வீதம் வழங்கி வருகின்றோம்.

ameen aliyar

கடந்த வருடம் எங்களது பயனாளிகள் ரூபாய் 25,000, 15,000, 13,000 எடுத்தனர். ரூபாய் 10000 க்கு மேற்பட்ட தொகை 9 பேர் எடுத்தார்கள். ரூபாய் 5000, ரூபாய் 3000 என்றும் பெற்றுக் கொண்டது எமது சகோதரிகளுக்கு மிகப் பெரும் உதவியாக இருந்தது.அந்த வகையிலே இந் நிகழ்வினை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த வருடம் இந்த நிகழ்விலே குறிப்பிட்ட 07 பேர் இணைந்திருந்தனர். இம்முறை 06 சகோதரிகளை இணைத்து 101பேருக்கு நோய் நிவாரணக் காப்புறுதித் திட்டத்தினை வழங்குகின்றோம்.

salma wedf

WEDF பணிப்பாளர் சல்மா ஹம்ஸா அவர்களின் தலைமையில் நடந்த இந் நிகழ்வுக்கு காத்தான்குடி ஜம்மியதுல் பலாஹ் உப அதிபர் அல்ஹாஜ் அலியார் மௌலவி அவர்களும் அதேபோன்று மெத்தைப்பள்ளி பேஷ் இமாம் அல்ஹாஜ். அமீன் மௌலவி அவர்களும் புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் முஸ்தபா மௌலவி அவர்களும் மற்றும் அமானா தகாபுல் நிறுவன முகாமையாளர் அனீஸ் அவர்களும் சமூக சேவையாளர்களான அமீர் ஹம்ஸா, இஸ்ஸதீன் , பௌஸ் மௌலவி போன்றவர்களின் பங்குபற்றுதலுடனும் குறிப்பாக இந் நிகழ்விற்க்கு அனுசரணை வழங்கிய 06 சகோதரிகளில் 03 சகோதரிகள் இங்கு வருகை தந்திருந்தனர் ஏனைய 03 சகோதரிகள் வருகை தரவில்லை. எனவே இவர்களுக்கான துஆ பிரார்த்தனையும் நடாத்தப்பட்டு இந் நிகழ்வு மிகவும் சிறப்பாக நிறைவுற்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s