-
சவுதி கூட்டணி படைகளின் தவறான வான்வழி தாக்குதலில் 17 பொது மக்கள் பலி
சவுதி: அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படையினர் டாயிஸ் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரில் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 17 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எமனிலிருந்து வருகின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தவறுதலாக பல வீடுகள் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டோரில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
-
ஸ்ரீபாத காணி அறபிக்கு விற்பனை: ஆட்டம் காணும் மகிந்தவின் கனவு
கொழும்பு: ஸ்ரீபாதத்தில் உள்ள காணி ஒன்றை சவுதி அரேபிய வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் பசில் ஈடுபட்டுள்ளார். இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும், தற்போது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக மஹிந்த அமைதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளளனர்.
-
இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் புல்லுமலைக்கு விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் புல்லுமலை: கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுடிருக்கும் இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் Shelley Whiting 27-10-2016 நேற்று முன்தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.
-
மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு வியாழக்கிழமை (I27) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம். சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி நஜீம் அழைக்கப்பட்ட போதிலும் அவரின் சார்பில் அரபு மொழித்துறை பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிம் (நளிமீ) கலந்து கொண்டார்.
-
விமல் வீட்டில் மரணித்த இளைஞன் திட்டமிட்ட படுகொலை
கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளிவந்த நிலையில் அந்த இளைஞனுக்கு எவ்வாறு மரணம் ஏற்பட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞனோடு சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த அவரது நண்பன் தனது முகப்புத்தகம் ஊடாக தெரிவித்துள்ள தகவல்கள் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.
-
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எம்.என். ஹன்ஸாவுக்கு உதவுங்கள்
பூகொடை குமாரிமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் நஸ்லியின் மகன் முஹம்மத் ஹன்ஸா எலும்பு புற்றுநோயால் (Osteo Sarcoma) பாதிக்கப்பட்டு மஹரகம அபேஷ்ஷா ( தேசிய புற்றுநோய் நிறுவனம்) மருத்துவமனையில் கிசிச்சைப்பெற்று வருகிறார். இவர் குமாரிமுல்லை முஸ்லிம் மகாவித்தியாலத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவராவார்.
-
பவ்சுல் ஹமீட் திரட்டிய பல மில்லியன் பொதுப்பணம் எங்கே?
அபூ யாஸிர் கொழும்பு: கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் நிர்வாகச் சபை தலைவரும், ஆடை வியாபாரியுமான பவ்சுல் ஹமீடுக்கு எதிராக பல ஊழல் குற்றாச்சாட்டுகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. பவ்சுல் ஹமீட் தொடராக பல அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து பொதுமக்களிடம் பணம் திரட்டியிருப்பதாகவும், கடந்த காலங்களில் திரட்டப்பட்ட இந்த பணத்திற்கு எவ்வித அபிவிருத்தி பணிகளும் இடம்பெறவில்லையென்றும் அறிய வருகிறது.
-
டோனியின் சாதனையை முறியடித்தார் மிஸ்பா உல் ஹக்
டுபாய்: ஆசிய கண்டத்தில் அதிக டெஸ்ட் தொடர்கள் வென்ற இந்திய அணி வீரர் டோனியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் முறியடித்துள்ளார். இந்திய அணி அண்மையில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்தது. ஆனால் இதற்கு இந்திய அணியின் தலைவராக இருந்தவர் விராட் கோஹ்லி.
-
“பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டாம்”- சுஹைப் அக்தார்
லாஹூர்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் சுஹைப் அக்தர், பாகிஸ்தான் வந்து யாரும் விளையாட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். பாகிஸ்தானில் குவாட்டா நகரில் உள்ள பொலிஸ் அகாடமியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர், இதில் பொலிசார் மற்றும் இராணுவவீரர்களும் அடங்குவர்.
-
மிகப் பெரிய இரண்டாவது அதிசொகுசு ஹோட்டல் திறந்துவைப்பு
கொழும்பு: இலங்கையில் மிகப் பெரிய இரண்டாவது அதிசொகுசு ஹோட்டல் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. 141 அறைகளை கொண்டுள்ள இந்த ஹோட்டல் இந்தியப் பெருங்கடல் மற்றும் களுகங்கை எல்லையில் உள்ள அழகான கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த கட்டட கலைஞருக்கான பெருமையை கொண்ட ஜெப்ரி பாவாவினால் ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
-
முஸ்லீம் விவாக சட்டத்தில் மாற்றங்கள்
கொழும்பு: இலங்கையில் முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கு உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவை கூடியபோது, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைத்தார்.