-
கைது செய்யப்பட்ட கருணாவுக்கு டிசம்பர் 7 வரை விளக்க மறியல்
கொழும்பு: அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரனை, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
SLTJ செயலாளருக்கு பிணை மறுப்பு
கொழும்பு: ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
-
FCID விசாரணையின் பின் கருணா கைது
கொழும்பு: முன்னாள் அமைச்சரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விநாயமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன முறைகேடு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்க வந்த வேளையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணப்படி அதிகரிக்கப்படும்: ரணில்
கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணப் படி அதிகரிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் மக்கள் சேவைகளை முன்னெடுத்துச் செல்ல ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
-
கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்
கியூபா: கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. ’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.
-
தெற்கு சூடான்; 5 மில்லியன் மக்கள் உணவின்றி தவிப்பு
கார்தௌம்: தெற்கு சூடான் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாடற்று, சுமார் 800 சதவிகிதம் அதிகரித்திருப்பதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. தெற்கு சூடான் எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது.
-
உண்மைகள் எப்பொழுதும் அழிவதில்லை
– சாட்டோ வை.எல்.மன்சூர்
-
ஹிலாரி வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட 3 மாநிலங்களின் வாக்கு இயந்திரங்கள் ஹெக் செய்யப்பட்டனவா..?
வோஷிங்டன் DC: அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட மூன்று முக்கிய மாகாணங்களின் வாக்கு இயந்திரங்கள் ஹெக் செய்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் தான் தேர்வு செய்யப்படுவார் என்ற பலரும் எதிர்பார்த்த நிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இது அமெரிக்க மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
பிரித்தானியா பட்ஜட்: முக்கிய அம்சங்கள்
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் அந்நாட்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டின் புதிய நிதி அமைச்சராக ஃபிலிப் ஹம்மோண்ட் கடந்த யூலை பதவி ஏற்றதற்கு பிறகு தற்போது முதன் முதலாக நாடாளுமன்ற பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
-
குழந்தைகளைக் கொஞ்சுவதால் மூளை நன்கு வளர்ச்சியடையும்
லண்டன்: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும் என்ற கேள்விக்கு குழந்தைகளிடம் அழகாக சிரித்து, செல்லமாக பேசுவது அவர்களது மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் நாம் அவர்களுடன் பேசும் விதம் முக்கிய பங்காற்றுவதாகவும், குழந்தைகளை அடிக்கடி கொஞ்சுவதால் அக்குழந்தைகளின் மூளை அதிக வளர்ச்சியடையும் எனவும் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மட்டு- மாவட்டத்தின் இரண்டாவது பாரிய நவீன அரிசி ஆலை கிரான்குளத்தில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 220 மில்லின் ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது பாரிய நவீன அரிசி ஆலை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் பி.சி.கே பற்றிக்கலோ (பிறைவட் லிமிட்டட்) எனும் பெயரில் 23-11-216 நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
-
பர்மிய படையால் கொல்லப்படும் ரொஹிஞ்சாக்கள்
மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து புலன்விசாரணைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. வடக்கு ரக்கைன் மாநிலத்தில் நாற்பது வீதமானோர் ரொஹிஞ்சாக்கள் ஆவர்.