கால்நடை வளர்க்கும் பல்கலைப் பட்டதாரிப் பெண்

galaha-jpg-1-jpg-farmகலஹா: கலஹா, பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண், கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றும் தற்பொழுது கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்.

குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது. இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனது இளங்கலை சான்றிதழை வீட்டின் சுவரில் தொங்கவிட்டுள்ள குறித்த பெண், கணவனுக்கு உதவியாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்.தொழில் பெறுவதற்காக பல பரீட்சைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு எந்த தொழிவாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

galaha-jpg-1-jpg-farm

தன்னை உயர் கல்வி படிப்பதற்காக தன் கணவர் செலவுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதன்மூலம் எந்தவித பிரதிபலனும் கிடைக்கவில்லை. ஆனால் கணவனுக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். என்னுடைய கல்வியை வைத்து கணவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் அவருடைய தொழிலுக்காக என்னால் உதவ முடியும் என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய வலியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே சுவரில் பட்டம் பெற்ற சான்றிதழை தொங்கவிட்டுள்ளதாக குறித்த பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மனதை நெகிழ்வித்துச் செல்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s