-
இலங்கை மக்களின் செயற்பாடு குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கவலை!
கொழும்பு: இலங்கை மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கவலை வெளியிட்டு, டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நேற்று காலை டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். அந்தப் பதிவில் கொழும்புக்கு அருகில் மிகவும் அழகான கடல் பகுதி உள்ளதாகவும்,
-
புனரமைக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் மக்கள் பாவனைக்காக இன்று மீள் திறக்கப்படுகிறது
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புனரமைக்கப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் 26-02-2017 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.எம்.சபி தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி 1, ஊர் வீதியைச் சேர்ந்த மீராசாஹிபு மரைக்கார் நூர் முகம்மது (ஓய்வுபெற்ற அதிபர்) இன்று (25) அதிகாலை 4 மணிக்கு காலமானார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. அன்னார் தாஜூதீன் (எரிபொருள் நிரப்பு நிலையம்), பரீட் டீன், முஹ்ஸினா ஆகியோரது அன்புத் தந்தையும் ஆவார்.
-
பல்கலைக்கழகங்களில் உங்களை பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்
ஜி. முஹம்மட் றின்ஸாத் கொழும்பு: கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுமையினை கருத்திற் கொண்டு இம்முறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாகவும் மற்றும் 24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட மாணவர்களுக்கு இம்முறை…
-
14 வயதில் குவைத் சென்று 14 வருடங்களின் பின் தாயகம் திரும்பிய ஹைருன் நிஸா
ஓட்டமாவடி: கடந்த 2003ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் குவைத் நாட்டிற்குச் சென்று பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கைப் பெண் 14 வருடங்களுக்குப்பின் நாடு திரும்பியுள்ளார். மொகமட் அலியார் ஹைருன் நிஸா என்ற பெண்ணே இவ்வாறு 14 வருடங்களாக குவைத்தில் சிக்கிக்கொண்டுள்ளார். ஓட்டமாவடியிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலமாக குறித்த பெண் கடந்த 2003ஆம் ஆண்டு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 14ஆவது வயதில் குவைத் சென்றுள்ளார்.
-
டுபாயில் முதன் முறையாக 63 வயதில் குழந்தை பெற்ற இலங்கை பெண்!
டுபாய்: இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயதுடைய பெண்ணொருவர் முதன் முறையாக குழந்தை பெற்றுள்ள சம்பவம் அண்மையில் டுபாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் 13 வயதில் குழந்தை உள்ளதாகவும் தற்போது 2வது திருமணம் செய்த அவர் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு முறை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு
லண்டன்: ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது.
-
வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென வலியுறுத்துவோர் முஸ்லிம்களின் விடயத்தில் கரிசனை காட்டாதிருப்பதேன்? பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் கேள்வி
சுஐப் எம் காசிம் கொழும்பு: வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அந்த அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையும் சகோதர முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலும் அவர்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
விளையாட்டு விபரீதமானதில் எட்டு வயது சிறுவன் பரிதாப மரணம்: சாய்ந்தமருதில் சம்பவம்!
சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கழுத்தில் எதிர்பாராத விதமாக புடவைத்துண்டு இறுகியதில் குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எட்டு வயதுடைய ஹஸைப் ரஷா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
-
காணி மறுசீரமைப்பு ஆணையகத்தின் மாவட்ட இயக்குநர் என். விமல்ராஜ் மீது துப்பாக்கிச்சூடு!
மட்டக்களப்பு: காணி மறுசீரமைப்பு ஆணையகத்தின் மாவட்ட இயக்குநரான என். விமல்ராஜ், சுடப்பட்டு காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுதாவனையிலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு நபர்கள், பேச வேண்டும் என கூறி அழைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
சீகிரிய வரலாற்று பொக்கிஷத்தில் இருப்பது சிங்கம் அல்ல புலி!
தம்புள்ளை: சீகிரிய மலைக்குன்றில் காணப்படும் மிருகத்தின் பாதம் சிங்கத்தினுடையது அல்ல புலியினுடையது என கருத்துக்கள் எழுந்துள்ளன. ரங்கிரி – தம்புளை விகாரையின் விகாராதிபதியும் பேராசிரியருமான இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சின்னமாகிய சீகிரிய மலைக்குன்றின் உச்சியில் உள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான வாயின் இரு பக்கத்திலும் மிருகமொன்றின் இரண்டு பாதங்கள் காணப்படுகின்றன.
-
இரண்டாவது நாளாகவும் தொடரும் அரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள் போராட்டம்
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அரசு துறைகளில் வேலை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்து மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்க முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.