WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றினால் மின்சார முச்சக்கர வண்டி தயாரிப்பு

    கொழும்பு: மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால்  மின்சார முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டியை எலெக்ட்ரை என்ற அடையாளப்படுத்தப்படுகிறது. காற்று மாசுவை குறைக்கும் வகையில் முகத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வர்த்தகர்களுக்காக மிகவும் பொருத்தமான வடிவத்தில் இந்த முச்சக்கர வண்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊடாக தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காக்க உதவுவோம்’ எனும் தொனிப்பொருளில் 12வது மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று 12 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி-02 ஜாமிஉல் அதர் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • மட்/அல்ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஹக்கீம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கௌரவிப்பு

    எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: அதிபர் சேவை பரீட்சையில் சித்திபெற்றமையிட்டும் பாடசாலைக்காக பாடசாலை வளர்ச்சியில் அர்ப்பணிப்படன் சேவையாற்றி வருவதையிட்டும் காத்தான்குடி மட்/மம/அல்ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஏ ஜீ எம் ஹக்கீம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால்  10.03.2017  பாடசாலையில் கௌரவிக்கப்பட்டார்.

  • அமைதியாக கொல்லும் பயங்கர சீனி நோய்: ஒரே நாளில் 175 பேர் கண்டுபிடிப்பு!

    நிந்தவூர்: இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகவும், அமைதியாக மனிதனைக் கொல்லும் பயங்கர நோயாகவும் சீனி நோய் உள்ளதாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், ஆயுர்வேத வைத்தியசாலையின் அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார். நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவின் நடமாடும் வைத்திய சேவை நேற்று (07) வைத்திய கலாநிதி கே.எல்.எம். நக்பர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே வைத்தியர் மேற்கண்டவாறு கூறினார்.

  • மர்ஹூம் ஜெனீரா பானுவை பட்டமளிப்புக்கு சமூகமளிக்குமாறு கிழக்குப் பல்கலைக்கழகம் அழைப்பு!

    ஏறாவூர்: கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏறாவூரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) என்ற பெண்னுக்கு ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள பட்டமளப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதும் தான் கதறி அழுததாக கணவர் மாஹிர் தெரிவித்துள்ளார்.

  • சவுதி மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு

    கோலாலம்பூர்: சவுதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சவுதி மன்னர் மலேசியாவிற்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பு தன்னுடைய படையினர் எமனிலிருந்து வந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மலேசிய காவல்துறை தலைவர் ஹாலித் அபுபக்கர் தெரிவித்தார்.

  • கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்து உயர்தர மாணவிகள் காரணமின்றி இடைநிறுத்தம் – பெற்றோர்கள் தடுமாற்றம்

    கெக்கிராவ: கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் சுலைஹா பானு அவர்கள் அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் ஐந்து  மாணவிகளை இடைநிறுத்தம் செய்துள்ளார். இதற்கான சரியான காரணம் எதுவும் முன் வைக்கப்படவில்லை. இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் செய்வதறியாமல் தடுமாரிக்கொண்டிருக்கின்றார்கள். வலையக்கல்வி பணிப்பாளர் இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருப்பதையிட்டு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • “காணி விவகாரத்தை சட்ட ரீதியாக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களில் கையாளுவதற்கு தயார்”-றஹீம் மௌலவி

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தான் பணம் கொடுத்து வாங்கிய காணியை சுவீகரித்துள்ளார் என கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் கர்பலா காணி விவகாரத்தை சட்ட ரீதியாக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களில் கையாளுவதற்கு தான் எந்த நேரமும் தயாராக இருப்பதாக றஹீம் மௌலவி தெரிவித்தார்.

  • பாடசாலை அதிபர்களுக்கு ராணுவப் பயிற்சி

    கொழும்பு: பாடசாலை அதிபர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்க தற்போதைய அரசாங்கமும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தென் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுக்கு இவ்வாறு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

  • ஐக்கிய இராச்சிய குடும்ப விசா விண்ணப்பத்தாரிகளுக்கு புதிய சட்டம் அமுல்

    லண்டன்: ஐக்கிய இராச்சிய அரசாங்கம் குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30 மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழி தேவையை அமுல்படுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. குடும்ப விசா மூலம் மிகவும் அடிப்படை ஆங்கில அறிவுடன் பிரிட்டனுக்குள் வந்தவர்களை இந்த நடைமுறை மூலம் பிரித்தானிய சமுதாயத்திற்குள் ஐக்கியமாவதை ஊக்கப்படுத்த முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  • பெண் பணியாளர்களை வைத்து சாதித்து காட்டிய எயார் இந்தியா

    புதுதில்லி: முதன்முறையாக உலகைச்சுற்றிய பயணிகள் விமானம் முழுவதும் பெண் குழுவினரால் இயக்கப்பட்டதாக இந்தியன் ஏயார்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று, புதுதில்லியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏயார் இந்தியா விமானமானது வெள்ளிக்கிழமையன்று இந்திய தலைநகருக்கு திரும்பியுள்ளது.

  • “காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 312 நபர்களின் 13 ஏக்கர் காணியை றஹீம் மௌலவி எனும் தனிநபர் என்பவர் சுவீகரித்துள்ளார்”

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 312 நபர்களின் 13 ஏக்கர் காணியை றஹீம் மௌலவி எனும் தனிநபர் என்பவர் சுவீகரித்துள்ளார் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தாங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக குறித்த கர்பலா காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

←Previous Page
1 … 135 136 137 138 139 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar