ஐக்கிய இராச்சிய குடும்ப விசா விண்ணப்பத்தாரிகளுக்கு புதிய சட்டம் அமுல்

லண்டன்: ஐக்கிய இராச்சிய அரசாங்கம் குடும்ப விசா ஊடாக வந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் (30 மாதங்கள்) தொடர்ந்தும் தங்கும் வதிவுரிமை விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய ஆங்கில மொழி தேவையை அமுல்படுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. குடும்ப விசா மூலம் மிகவும் அடிப்படை ஆங்கில அறிவுடன் பிரிட்டனுக்குள் வந்தவர்களை இந்த நடைமுறை மூலம் பிரித்தானிய சமுதாயத்திற்குள் ஐக்கியமாவதை ஊக்கப்படுத்த முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Family route ஊடாக தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்கு விண்ணப்பம் மேற்கொள்ளும் ஐரேப்பிய (EEA) நாடுகளைச் சாராத பெற்றோர்கள் மற்றும் கணவன் மனைவி விண்ணப்பத்தாரர்களுக்கு இந்த புதிய A2 ஆங்கில மொழி தேவைச் சட்டம் 01 மே 2017யிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

அத்துடன், இந்தத் திகதிற்குப் பின்னர், கணவன் மனைவி மற்றும் பெற்றோர் ஆக ஐந்து வருட வதிவிட முறை மூலம் மேலதிக தங்குமிட விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி விதிமுறை அடங்கும்.

பிரித்தானிய அரசாங்கம் இந்த நடைமுறையை கொண்டுவருவதன் மூலம் பெண்களுக்கு வேலை பெற்றுகொள்வதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கின்றது.

இவ்வாறு குடும்ப விசாமூலம் வருபவர்களுக்கு ஆங்கில அறிவை அதிகரிக்கச் செய்வதன் மூலம், அனைவரும் இலகுவாக அனைத்துப் பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், பெற்றோர் மூலம் பிள்ளைகளுக்கு கல்விப் பக்கத்தில் இலகுவாக உதவிசெய்யமுடியும்.

புதிய இந்த A2 ஆங்கில மொழித் தேவை, அவர்கள் பின்னர் நிரந்தர வதிவுரிமை விண்ணப்பிக்கும் போது இருக்கின்ற B1 ஆங்கில மொழித் தேவை வழிக்கு ஒரு முன்படியாக விளங்கும்.

அத்துடன், இவ்வாறானவர்கள் கணவன் மனைவி ஊடாக மற்றும் பெற்றோர் ஆக ஐந்து வருடம் வசிக்கும் தகுதிக் காலப்பகுதியில் அவர்களுடைய மொழித்திறனை அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்புகின்றது.

இந்த மொழித்தேவையை எவ்வாறு பிரயோகிக்கப்படும்?

01 மே 2017 இலிருந்து, கணவன் அல்லது மனைவியாக இரண்டரை வருடங்கள் (30 மாதங்கள்) வசித்தவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் அந்த விசாவின் கீழ் தங்குவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது இந்த புதிய ஆங்கில மொழித் தேவையை நிவர்த்தி செய்யவேண்டும்.

அதாவது அவர்கள் தங்கள் பேச்சு மற்றும் செவிமடுத்தல் திறமையை (Speaking and Listening) A2 மட்டத்தில் அல்லது அதற்கும் மேலாக பூர்த்தி செய்யவேண்டும்.

பின்வரும் வகையைச் சேர்ந்தவர்களுக்கு விதிவிலக்கு உண்டு

நீங்கள் ஆங்கில மொழி பேசும் நாட்டிலிருந்து வந்திருந்தால்
ஆங்கில முறை மூலம் கற்பிக்கப்பட்ட பட்டம் (ie;BA) பெற்றிருந்தால்
அல்லது இந்த மொழிமுறைக்கு விதிவிலக்கானவர்கள் பட்டியலில் அடங்கியிருந்தால்.
தற்பொழுது உள்ள A1 மொழி தேவை விதியிலிருப்பது போல, விண்ணப்பாதாரிகள் விண்ணப்பம் மேற்கொள்ளும் திகதியண்று A2 விதியிலிருந்து பின்வரும் சந்தர்ப்பங்களில் பொருந்தாமல் இருக்கலாம்,

அவர்கள் 65 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால்.
அவர்களுக்கு இந்த விதிமுறை சந்திப்பதற்கு தடங்கலாக ஏதாவது இயலாமைத் தன்மை இருந்தால்.
அவர்களுக்கு இந்த விதிமுறையை சந்திப்பதை தடுக்கும் வகையில் ஏதாவது பிரத்தியேகமான சூழ்நிலைகள் இருந்தால்.
30 மாதங்கள் பின்னர் இவ்வாறு கணவன் மனைவி மற்றும் 5 வருட குடும்ப வழி விசாவின் கீழ் விசா வழங்கப்பட்ட பெற்றோர்கள் இந்த மொழி விதிமுறைறை பின்பற்ற தவறினால், அவர்கள் குடும்ப விசா விதிமுறையின் கீழ், 10 வருட வழிமுறை மூலம் வதிவுரிமை மேற்கொள்ள வேண்டிய அனைத்து விதிமுறைகளையும், பிரத்தியேக விதிமுறைகளையும் சந்திக்கவேண்டும்.

அதன் மூலமே அவர்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அடிப்டையில் அவர்கள் விசா பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். பின்னர் 10 வருடங்களுக்கு பின்னர், அவர்கள் நிரத்தர வதிவுரிமையயைப் பெறுவதற்கு B1 மற்றும் பிரித்தானியா வாழ்க்கை முறைப் பரீட்சையில் சித்திபெற வேண்டும்.

A2 பரீட்சையை பின்வரும் அமைப்புக்களே வழங்குகின்றன.

Trinity College London
IELTS SELT Consortium
A2 பரீட்சை பற்றி

A2 மட்டத்தில், ஒரு சாதாரண மனிதர் சாதாரண கருத்துகளை விட சற்று ஆழமாக உரையாடலை மேற்கொள்ளலாம். அவர்கள் பிரதான கருத்துக்களை, சிறிய தெளிவான செய்திகளை, அறிவிப்புக்களை விளங்கிக்கொள்வார்கள். அவர்கள் தெரிந்த விடயங்கள் பற்றி குறுகிய தெளிவான உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s