-
ஆசனப்பட்டி அணியாவிட்டால் ரூ. 1000 ஸ்தல அபராதம்
மோட்டார் வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தண்டப்பணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய வாகனத்தில் ஆசனப்பட்டி அணியாமல் பயணம் செய்யும் சாரதிக்கும், சாரதிக்கு அருகில் முன் ஆசனத்தில் இருந்து ஆசனப்பட்டி அணியாமல் செல்லும் பயணிக்கும் தலா 1000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படும் என அமைச்சரவையில் பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். இது தொடர்பாக அமைச்சர் குமார வெல்கம முன் வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-
தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்
தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக நான் ஜெனீவா போகவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு எங்களுடைய அமைச்சு பொறுப்புக்கூற வேண்டிய பல விடயங்கள் உள்ளமையால் இந்த தூதுக் குழுவில் அங்கு போய் பல விடயங்களை கதைக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டார்.
-
உ/த பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் தாமதத்தால் மாணவர்கள் கவலையில்
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தப் பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. உ/த பரீட்சைக்குத் தோற்றி மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் விரக்தி மற்றும் கவலையுடன் இருப்பதாக சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
-
இந்து-சிங்களம், இந்து-இஸ்லாம் காதல் ஜோடிகளுக்கு மெகசின் சிறையில் இன்று திருமணம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் உள்ளிட்ட இருவர் இன்று (05) திருணம பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
-
சாந்தி மார்க்கமும் சிலைக்கு மாலையும்!
-M.I. அகமட் முஆத் நேற்று (04-04-2012) புதன்கிழமை காலை ஆரையம்பதி – காத்தான்குடி எல்லையில் ஆரையம்பதி பிரதேச சபையின் தலைவர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் தலைமையில் நடைபெற்ற விவேகானந்தர் சிலை நடும் நிகழ்வுக்கு காத்தான்குடியில் இருந்தும் சில பிரமுகர்கள் சென்றிருந்தனர்.
-
முதலை இழுத்துச் சென்றதால் மாணவி பலி
-Tamilmirror அக்குரஸ்ஸ நில்வள கங்கையில் குளிக்கச் சென்ற 18 வயதான பாடசாலை மாணவியொருவர் முதலையொன்று இழுத்துச் சென்றதால் உயிரிழந்துள்ளார். சில மணித்தியாலங்களின் பின் அவரின் சடலத்தை கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸார், அக்குறஸ்ஸ பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் உதவியுடன் படகு மூலம் கிராமவாசிகள் தேடுதலை மேற்கொண்டனர். டிக்கோவிட்டவை சேர்ந்த நுவன்கிகா சத்ரணி என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
-
மீண்டும் எழுச்சியுடன் சுவாமி விவேகானந்தர்
மட்டக்களப்பின் ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைப் பகுதியின் பிரதான வீதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இனந்தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை மீண்டும் இன்று புதன்கிழமை காலை அதே இடத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-
முதலாவது டின்மீன் தொழிற்சாலை ஜனாதிபதியால் இன்று திறப்பு!
இலங்கையின் முதலாவது டின்மீன் தொழிற்சாலை காலி மீன்பிடித்துறை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 84 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையில் முதற்கட்டமாக நாளென்றுக்கு 10 ஆயிரம் டின்மீன்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு நாட்டை மட்டும் குறிவைத்து இயங்குவது ஐ.நா. மனித உரிமை பேரவையின் கடமை அல்ல!
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் சோ. டெக்கான் க்ரானிக்கள் பத்திரிகைப் பொறுப்பாசிரியர் பகவான் சிங்குக்கு அளித்த பேட்டி: கேள்வி: இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கூட உள்ள தமிழர் கட்சிகளும், தமிழர் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கெளன்ஸின் முன்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன? சோ: அமெரிக்கத் தீர்மானம் பற்றி இங்கே பத்திரிகைகளும், பல அமைப்புகளின் தலைவர்களும் பேசுவதை…
-
கிண்ணியா குட்டிக்கரைச்சைப் பாலத்தின்கீழ் பெரும் எண்ணிக்கையான பாம்புகள்
-Tamilmirror கிண்ணியா கடற்கரையோரப் பிரதேசத்தில் உள்ள குட்டிக்கரச்சைப் பாலத்தின்கீழ் இன்று இரவு பெரும் எண்ணிக்கையான பாம்புகள் காணப்பட்டன. திடீரென பெரும் எண்ணிக்கையான பாம்புகள் ஊர்ந்துகொண்டிருப்பதை கேள்விப்பட்ட பொதுமக்கள், அவற்றை பார்வையிடுவதற்கு அப்பகுதியில் திரண்டனர்.
-
நல்லாட்சியை உறுதிப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்!
-ஜனாதிபதி கோரிக்கை- ‘ஜெனீவா- நியூயோர்க் அல்லது வொஷிங்டன் எங்கிருந்து எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முழுத் தகைமையுடன் இருக்கும் நிலையில்- அரச உத்தியோகத்தர்களும்- திணைக்களத் தலைவர்களும் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தி சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை உயர்த்த செயற்படவேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
வாகனங்களை ஏற்றி வரும் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு திருப்பப்படும்.
வாகனங்களை ஏற்றிவரும் கப்பல்கள் அனைத்தும் மே மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குத் திருப்பப்படும் என துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.